’கடகம் ராசிக்கு விலகும் அஷ்டம சனி! இழந்தவைகள் மீண்டும் கிடைக்கும் காலம்!' 2025 சனி பெயர்ச்சி பலன்கள்!
இந்த காலகட்டத்தில் உங்கள் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும், உங்கள் யோசனைகள் எளிதில் செயலாக மாறும், வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு வியாபாரம், வெளிநாட்டு வாழ்கை, வெளிநாட்டு கல்வி ஆகியவை கிடைக்கும்.

காலபுருஷனுக்கு 4ஆம் வீடான கடகம் ராசிக்காரர்கள் தாயுள்ளம் நிறைந்தவர்கள். எல்லோரையும் அரவணைத்து செல்வார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அஷ்டம சனி காரணமாக கடகம் ராசிக்காரர்கள் சிக்கல்களையும், சங்கடங்களையும் அனுபவித்து இருப்பீர்கள்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 27, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மகிழ்ச்சியான நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Mar 26, 2025 06:03 PMகுருபெயர்ச்சி பலன்: பண அதிர்ஷ்டம் இந்த ராசிகள் கதவை தட்டப்போகுது.. 2025-இல் மே குரு பெயர்ச்சி.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
Mar 26, 2025 02:26 PMகீர்த்தி யோகம்: சனிப்பெயர்ச்சி 2025.. தலைகீழாக மாறப்போகும் ராசிகள் யார்?.. சனி குறித்து விட்டார்..!
Mar 26, 2025 11:17 AMரிஷபம், கும்பம், விருச்சிக ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. சனி உதயத்தால் நல்ல நேரம் ஆரம்பம்.. பதவி உயர்வு கிடைக்கும்!
Mar 26, 2025 06:30 AMKetu Transit 2025: அந்த ராசிகளே தான்.. கேது பெயர்ச்சி.. அசுப கிரகம் தரும் யோக பலன்களை பெறும் ராசிகள்!
Mar 26, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பணம் தேடி வரும் யோகம் உங்களுக்கா.. கவனமா இருங்க காரியம் முக்கியம்.. இன்று ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
இழந்தவைகள் மீண்டும் கிடைக்கும் காலம்!
வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். வாழ்கையில் இழந்தவைகள் மீண்டும் கிடைக்கும் காலம் பிறக்கும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு சனி பெயர்ச்சிக்கு பிறகு விடிவுகாலம் கிடைக்கும். உங்களை அவமதித்தவர்களுக்கு பதில் அடி தருவீர்கள்.
இந்த காலகட்டத்தில் உங்கள் சிந்தனைகளில் மாற்றம் பிறக்கும், உங்கள் யோசனைகள் எளிதில் செயலாக மாறும், வெளிநாட்டு வேலை, வெளிநாட்டு வியாபாரம், வெளிநாட்டு வாழ்கை, வெளிநாட்டு கல்வி ஆகியவை கிடைக்கும்.
தள்ளி போனவை தேடி வரும் !
கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களுக்கு மறுக்கப்பட்ட அல்லது தள்ளி போன வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தீர்க்கவே முடியாத பிரச்னைகள் முடிவுக்கு வரும். மனதில் இருந்த எதிர்மறை சிந்தனைகள் நீங்க நேர்மறை சக்தி பிறக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும்.
சனி பகவான் 8ஆம் இடத்தில் இருந்து 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் தந்தை - மகன் இடையே கருத்து வேறுபாடுகள் வரும். விரும்ப தகாத இடமாற்றம் அல்லது வேலை மாற்றங்கள் வரலாம். குழந்தைகளுக்கு உடல் நிலை பிரச்னைகள், குழந்தைகள் கல்வியில் தடங்கள்கள் வரும், பதவி உயர்வுகள் தள்ளி போகும்.
சனி பகவானின் பார்வையும் பலன்களும்!
சனி பகவான் 3ஆம் பார்வையாக 11ஆம் வீட்டை பார்ப்பதால் வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் இருக்கும்.
மூன்றாம் இடத்தை சனி பகவான் 7ஆம் பார்வையாக பார்ப்பதால் சகோதரர்கள், நண்பர்கள் உடனான உறவில் கவனம் தேவை. சில இடையூறுகள், இடைஞ்சகள் வரலாம்.
சனி பகவான் 10ஆம் பார்வையாக 6ஆம் வீட்டை பார்ப்பதால் கடன் சுமையில் இருந்து வெளியில் வந்தாலும் சுப கடன்கள் இருந்து கொண்டே இருக்கும். சிறுசிறு உடல்நல பிரச்னைகள் வந்து போகும்.
வழிபாடும் பரிகாரமும்!
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்து, நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும். சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரிப்பதன் மூலமும், உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று எள் தானம் செய்வதன் மூலமும் வாழ்கையில் உண்டாகும் பிரச்னைகள் நீங்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
