Career Horoscope: ’பணம் கொட்ட கடக ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்’
”Career Horoscope: எடுத்த செயலில் வெற்றியை பெறும் விடா முயற்சியை கொண்ட இவர்களுக்கு, இரண்டு தொழில்களை ஒரே நேரத்தில் பார்க்கும் அம்சம் உண்டு”
சந்திர பகவானை ராசி நாதனாக கொண்ட கடக ராசிக்காரர்கள் நற்குணங்களையும், அமைதியாகவும் ஒழுக்கமும் கனிவும் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
இவர்களுக்கு தாய்மைப் பண்புகள் அதிகம் இருக்கும். குடும்பத்தினர், நண்பர்கள் மீது அதிக பாசம் செலுத்துவார்கள். மற்றவர்களின் தேவைகளை கவனித்துக்கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள். இரக்க குணமுடையவர்கள், பிறரின் துன்பத்தை தங்கள் துன்பமாக உணர்வார்கள் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
கற்பனை திறன் அதிகம் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு கலை, இசை, எழுத்து போன்ற துறைகளில் ஆர்வம் இருக்கும். படைப்புத்திறன் மிக்கவர்களாகவும், புதுமைகளை புகுத்துவார்களாகவும் இவர்கள் விளங்குவார்கள்.
எடுத்த செயலில் வெற்றியை பெறும் விடா முயற்சியை கொண்ட இவர்களுக்கு, இரண்டு தொழில்களை ஒரே நேரத்தில் பார்க்கும் அம்சம் உண்டு.
புதியதாக தொழில் தொடங்கும் கடக ராசிக்காரர்கள் தனது மனைவியின் பெயரில் நிறுவனங்களை தொடங்குவது ஏற்றமாக இருக்கும்.
வணிக நிறுவனங்களில் திருப்பதி ஏழுமலையான் படம் வைத்துக் கொள்வதும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திருப்பதி சென்று வர வாழ்கையில் திருப்பங்கள் ஏற்படும்.
உணவுத் தொழில், பெயிண்ட் தொழில், ஜெராக்ஸ், கம்பியூட்டர் செண்டர் உள்ளிட்ட தொழில்கள் கடக ராசிக்கார்களுக்கு உகந்ததாக அமையும்.
நகை அடகு கடை வைத்தால் அதிக லாபம் பெரும் அம்சம் உண்டு இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இருப்பினும்,எண்ணெய் தொடர்பான தொழில்களை செய்வதை கடகராசிக்காரர்கள் தவிர்ப்பது நல்லது.
கடக ராசிக்காரர்கள், தங்கள் அறிவை பிறருக்கு பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் போன்ற பணிகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்கள்.
மக்களின் தேவைகளை புரிந்து சரியான திட்டங்களையும், வியூகத்தையும் அமைத்து செயல்படால் எண்ணிய துறைகளில் சாதிக்கலாம் என்கின்றனர் ஜோதிடர்கள்.
டாபிக்ஸ்