Ashtama shani Luck: அட்டை போல ஒட்டும் அஷ்டம சனி.. தப்பிக்க என்ன வழி? - ஜோதிடர் பேட்டி!
பொதுவாக கடக ராசிக்காரர்களுக்கு துணைவியானது கொஞ்சம் ஏறுக்குமாறாகதான் அமையும். திருமண வாழ்க்கைக்குள் செல்லவும் முடியவில்லை.
கடகராசிக்கு அஷ்டம சனி நடந்துகொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு அதன் மூலம் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும். அதில் இருந்து தப்பிக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் தன்னுடைய யூடியூப் சேனலில் அண்மையில் பேசினார்.
அவர் பேசும் போது, “ பொதுவாக கடக ராசிக்காரர்களுக்கு துணைவியானது கொஞ்சம் ஏறுக்குமாறாகதான் அமையும். திருமண வாழ்க்கைக்குள் செல்லவும் முடியவில்லை. பின்னால் வரவும் முடியவில்லை என்ற ரீதியில் எக்கச்சக்கமான கடக ராசிக்காரர்கள் இங்கு இருக்கிறார்கள்.
கடக ராசிக்காரர்கள் பொதுவாக காதலித்துதான் திருமணம் செய்து கொள்வார்கள். நிறைய விஷயங்களை கிரகிக்கும் அவர்களுக்கு, அது தொடர்பாக மனதிற்குள் ஒரு கணக்கு ஓடிக்கொண்டே இருக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு தந்தையின் உறுதுணையானது மிக மிக முக்கியம். சுய ஜாதகத்தில் சூரியன் மட்டும் சரிவர அமையாமல் வேறு இடத்தில் அமைந்து இருந்தால் கடகராசிக்காரரின் வாழ்க்கையே தோல்வி பாதையில் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
சூரியன் மட்டும் சரியான இடத்தில் உட்கார்ந்து விட்டால் அவர்கள் பெரிய பதவிகளில் சென்று அமர்வார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால், அந்தப் பதவியை இவர்கள் அலங்கரிப்பார்கள் என்று சொல்லலாம். நண்பர்களை நம்பி அதிகமாக ஏமாறும் ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்களே!
அஷ்டம சனி வரும் போது, மனதும், புத்தியும் சரிவர வேலை செய்யாது. எல்லாவற்றிற்கும் இங்கு மூலக்காரணம் மனது தான் அந்த மனதே தடம் மாறி செல்லும் பொழுது, வாழ்க்கையே கைமீறி செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அஷ்டம சனி காலத்தில், அதிகமான அலைச்சல் இருக்கும். வீட்டில் திருடு நடக்கும். காதல் பிரிவு ஏற்படலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம்.
ஆகையால் இவையெல்லாவற்றில் இருந்து ஆறுதல் கிடைக்க, தினமும் சிவாலயங்களுக்குச் சென்று, நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். நமச்சிவாய என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்ல வேண்டும். அதே போல நிறைய தான தர்மங்கள் செய்ய வேண்டும்” என்று பேசினார்.
டாபிக்ஸ்