’மனநோய் பாதிப்புக்கு உள்ளாகும் ஜாதகம் எது?’ கிரக இணைவுகளால் உண்டாகும் விபரீதம்! ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
ஒரு ஜாதகத்தில் சந்திர பகவான் உடன் பாவக் கோள்களான சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு மனநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
நவீனயுகத்தில் மன அழுத்தம் என்பது மனிதர்கள் சந்திக்கும் பெரும் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. ஜோதிடத்தில் சந்திர பகவான் மனோகாரகனாக உள்ளார். ஐந்தாம் இடம் என்பது மனதை குறிக்கும் இடம் ஆகும். ஒரு ஜாதகத்தில் சந்திர பகவான் உடன் பாவக் கோள்களான சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு மனநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மனநோய் தரும் கிரக இணைவுகள்
சந்திரன், கேது இணைந்து இருந்தால் மனநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. சந்திரன், ராகு இணைந்து இருந்தால் இந்த பாதிப்பு வர 75 சதவீதம் வாய்ப்புகள் உள்ளது. சந்திரன், சனி இணைந்து இருந்தால் மனநோய் வரும் வாய்ப்பு 50 சதவீதம் உண்டு. சந்திரன், செவ்வாய் இணைந்து இருந்தால் 35 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
சந்திரனும், செவ்வாயும் இணைவது சந்திர மங்கள யோகம் என்றாலும், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் சந்திரன் உடன் இணைவது பாதிப்புகளை தரும். சனி - சந்திரன் சேர்க்கை புணர்ப்பு தோஷத்தை உண்டாக்கி மனநிலையில் கடும் பாதிப்புகளை உருவாக்கும். ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் சனி- சந்திரன் இணைந்து இருந்து, சனி மகாதசை நடந்தால் வாழ்கை துணை மீது சந்தேகம் உண்டாகி பிரச்னைகளை ஏற்படுத்தும்.
ராகு, கேதுக்களும் சந்திரனும்
ராகு, கேது உடன் சந்திரன் இணைந்து இருந்தால் இவர்கள் எப்போதும் மன அழுத்த பாதிப்பிலேயே இருப்பார்கள். ஆனால் சனி-சந்திரன் இணைவு மற்றும் சந்திரன் - செவ்வாய் இணைவு உள்ளவர்களுக்கு அது சார்ந்த தசைகள் வரும் காலத்தில்தான் மன அழுத்த பாதிப்புகள் உண்டாகும்.
இவர்களுக்கு லக்னாதிபதி வலுப்பெற்று இருந்தாலோ அல்லது லக்னத்தில் குரு இணைந்தாலோ, அல்லது இந்த கிரக இணைப்பை குரு பார்த்தாலோ அதனை சமாளிக்கும் திறன் ஜாதகருக்கு உண்டு.
பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ஆம் வீட்டில் 5ஆம் இடத்திற்கு உரியவர் ராகு, கேது கிரகங்களால் கிரகனம் செய்யப்பட்டு இருந்தாலோ அல்லது நீசம் பெற்று இருந்தாலோ கடும் மன அழுத்தத்திற்கு ஜாதகர் உள்ளாவார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.