’குரு பகவானுக்கு நிகரான சுபர் யார் தெரியுமா?’ உங்க ராசில இப்படி இருந்தா யோகம்தான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’குரு பகவானுக்கு நிகரான சுபர் யார் தெரியுமா?’ உங்க ராசில இப்படி இருந்தா யோகம்தான்!

’குரு பகவானுக்கு நிகரான சுபர் யார் தெரியுமா?’ உங்க ராசில இப்படி இருந்தா யோகம்தான்!

Kathiravan V HT Tamil
Oct 09, 2024 08:19 PM IST

கால புருஷனின் பாக்கிய ஸ்தானத்தின் அதிபதியாகவும், சுக ஸ்தானத்தில் உச்ச வலிமை பெறுபவருமாக குரு பகவான் உள்ளார். சுப விரையங்கள் தரும் மீனத்தை அவருடைய ஆட்சி வீடாக குரு பகவான் கொண்டு உள்ளார். லக்னத்தில் குருபகவான் அமர்தால் திக்பலம் பெற்று அவரை நல்வழிப்படுத்துவர்.

’குரு பகவானுக்கு நிகரான சுபர் யார் தெரியுமா?’ உங்க ராசில இப்படி இருந்தா யோகம்தான்!
’குரு பகவானுக்கு நிகரான சுபர் யார் தெரியுமா?’ உங்க ராசில இப்படி இருந்தா யோகம்தான்!

தனித்து இருந்தாலும், ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலோ அல்லது பாவக் கோள்கள் உடன் இணைந்து இருந்தாலும் குரு பகவான் தான் பார்க்கும் இடங்களை வலுப்படுத்துவார். எந்த நிலையில் இருந்தாலும் கெடுதல்களை ஏற்படுத்த மாட்டார் என்பது குரு பகவானின் இயல்பு ஆகும். 

கால புருஷனின் பாக்கிய ஸ்தானத்தின் அதிபதியாகவும், சுக ஸ்தானத்தில் உச்ச வலிமை பெறுபவருமாக குரு பகவான் உள்ளார். சுப விரையங்கள் தரும் மீனத்தை அவருடைய ஆட்சி வீடாக குரு பகவான் கொண்டு உள்ளார். லக்னத்தில் குருபகவான் அமர்தால் திக்பலம் பெற்று அவரை நல்வழிப்படுத்துவர். ஒழுக்கம் சார்ந்த மனிதனை உருவாக்கும் தன்மை குரு பகவானுக்கு உண்டு. 

குருவுக்கு நிகரான சுபர் யார்?

சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களுமே சுப கிரகங்கள்தான். சுக்கிரன் ஒளித்திறன் பெற்ற கிரகம் ஆக உள்ளார். ஆனாலும் தன்னுடைய ஒளியை அதிக வீடுகளுக்கு சிதறடிக்க இயலாத ஒரு கிரகம் ஆகும். மாபெரும் ஒளியான சூரியனுக்கு அருகாமையிலே இருக்கக்கூடிய சுபர் ஆக சுக்கிர பகவான் உள்ளதால் குரு பகவானை போல் 3 வீடுகளை வலுப்பெற செய்ய முடியாது. தன்னுடைய வீட்டுக்கும், தனது பார்வை பெறும் வீட்டிற்கும் மட்டுமே நன்மைகளை செய்ய முடியும். மேலும் பாவக் கோள்கள் இணைவு இவரின் நற்தன்மைகளை பாதிக்கும் என்பதால் இவரை குருவுக்கு நிகரான சுபர் ஆக எடுத்துக் கொள்ள முடியாது. 

புதன் பகவானை பொறுத்தவரை சேரும் கிரகத்தை பொறுத்து தனது குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையை பெற்றவர். இவராலும் சூரியனை விட்டு அதிக தூரம் விலக இயலாத சுபக் கோள் ஆகும். புதன் பகவான் சூரியனோடு இருக்கும்போது நற்பலன்களை தருவார். ஆனால் மற்ற பாவிகள் உடன் புதன் இணைந்தால் சில தீய பலன்களை தருவார். 

ராகு, கேதுவால் புதன் பாதிக்கப்படுவது இல்லை என்றாலும். குறுக்கு வழி, தேவையற்ற மெய்ஞானம், விதண்டாவாதம் ஆகியவற்றை செய்வார்கள்.  ஆனாலும் குரு பகவான் அளவுக்கு பார்வை தீட்சனியம் இவருக்கு கிடையாது. இவரால் சூரியனை தாண்டி ஒரு வீட்டை விட்டு விலக முடியாது. இதனால் குரு பகவானுக்கு நிகரான சுபராக புதன் பகவானை எடுத்துக் கொள்ள முடியாது. 

சந்திரனை பொறுத்தவரை இரட்டை வேடம் தரிக்கக்கூடிய ஒரு கிரகம் ஆகும். வளர்பிறை காலத்திலும், தேய்பிறை காலத்திலும் பலன்கள் மாறுபடும். கலப்பு குணம் கொண்ட கிரகம் ஆன சந்திரனால் குரு பகவானை போலவே இவரும் அதிக வீடுகளை வலிமை செய்வார். 

லக்ன கேந்திரங்களை போலவே சந்திர கேந்திரங்களும் வலிமையானவை. வளர்பிறையில் உள்ள சந்திரன் தனது கேந்திர ஸ்தானங்கள் ஆன 4, 7, 10 ஆகிய இடங்களை வலிமை செய்கிறார். பௌர்ணமிக்கு நிகரான ஒளியைப் பெற்றுவிட்ட சந்திரன் ஆனவர் சந்திர அதியோகம் என்கின்ற பெயரில் 6, 7, 8 ஆம் வீடுகளை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டவர் ஆவார். 

சந்திரன் நின்ற வீடு கெடாது.  வளர்பிறையில் அஷ்டமி திதி முதல் பௌர்ணமி வரையிலான காலத்தில் சந்திரன் நல்ல பலன்களை அளிப்பார். பௌர்ணமிக்கு பிறகான 3 நாட்கள் வரை ஓரளவு நற்பலன்கள் உண்டு.  இந்த காலத்தில் குரு பகவானை மிஞ்சிய சுப கிரகம் ஆக சந்திரன் செயல்படுவார். கடும் பாவிகள் உடன் சந்திரன் இணையும் போது ஜாதகருக்கு கடும் மன குழப்பங்களை ஏற்படுத்துவார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner