Horoscope Today: மாதத்தின் முதல் நாள் உங்களுக்கு எப்படி?.. 12 ராசிகளுக்கான உரிய பலன்கள் இதோ!
Today Rasipalan: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (நவம்பர் 01) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.
ரிஷபம்
எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும்.
மிதுனம்
வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
கடகம்
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான விஷயங்களில் தெளிவு பிறக்கும்.
சிம்மம்
அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.
கன்னி
சிறு மற்றும் குறு தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில்நுட்ப தேடல் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். விவேகமான செயல்பாடுகள் முன்னேற்றத்தை உண்டாக்கும்.
துலாம்
தேவையற்ற விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். மறதி தொடர்பான பிரச்னைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். சில பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அரசு அதிகாரிகள் கவனத்துடன் செயல்படவும்.
விருச்சிகம்
சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும்.
தனுசு
சமூகப் பணிகளில் மாற்றமான சில அனுபவங்கள் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும்.
மகரம்
அரசு பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துகளின் வழியில் மாற்றம் ஏற்படும்.
கும்பம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.
மீனம்
பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்