தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (22.05.2024):'கவலை மறையும்..இனி எல்லாம் சுபமே'.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Today Rasipalan (22.05.2024):'கவலை மறையும்..இனி எல்லாம் சுபமே'.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 22, 2024 05:35 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 22) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (22.05.2024):'கவலை மறையும்..இனி எல்லாம் சுபமே'.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!
Today Rasipalan (22.05.2024):'கவலை மறையும்..இனி எல்லாம் சுபமே'.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசி பலன்கள் இதோ!

மேஷம்

உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய அறிமுகமும், செல்வாக்கும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.

ரிஷபம்

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் தோற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகம் நிமித்தமான பயணங்கள் மேம்படும்.

மிதுனம்

எதிர்பாராத செலவுகளின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகனம் மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை குறைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். மதிப்பு உயரும்.

கடகம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பணி சார்ந்த செயல்களில் புரிதல் ஏற்படும்.

சிம்மம்

பேச்சுக்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் நம்பிக்கை ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியான முயற்சி கைகூடும். மனதளவில் தெளிவு ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் மேம்படும்.

கன்னி

ஆர்வமும் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பணிகளில் மதிப்பு மேம்படும்.

துலாம்

நீங்கள் நினைத்த காரியங்கள் நடப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் ஏற்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சகோதர வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

தனுசு

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

மகரம்

 தடைகள் விலகும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வெளியூர் பொருட்கள் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். 

கும்பம்

எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த மனவருத்தம் விலகும். மனதளவில் சில மாற்றங்கள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றியாகும். 

மீனம்

வாகன பயணங்களில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் விவேகத்துடன் செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் அதிக முயற்சிக்குப்பின் நிறைவேறும். செலவுகள் செய்தாலும் திருப்தி ஏற்படாது. உடன் பிறப்புகளால் அலைச்சல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்