தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (09.05.2024): 'இனி எல்லாம் சுபமே..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan (09.05.2024): 'இனி எல்லாம் சுபமே..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 09, 2024 05:15 AM IST

Today Horoscope, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 09) வேலை, தொழில், வருமானம், காதல், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான.12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை இங்கு காணலாம்.
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான.12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை இங்கு காணலாம்.

மேஷம்

உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய அறிமுகமும், செல்வாக்கும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவு திறன் மேம்படும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும்.

ரிஷபம்

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் தோற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகம் நிமித்தமான பயணங்கள் மேம்படும்.

மிதுனம்

எதிர்பாராத செலவுகளின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாகனம் மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை குறைப்பதற்கான சூழ்நிலை ஏற்படும். மதிப்பு உயரும்.

கடகம்

உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பணி சார்ந்த செயல்களில் புரிதல் ஏற்படும்.

சிம்மம்

பேச்சுக்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் நம்பிக்கை ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியான முயற்சி கைகூடும். மனதளவில் தெளிவு ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் மேம்படும்.

கன்னி

ஆர்வமும் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பணிகளில் மதிப்பு மேம்படும்.

துலாம்

நீங்கள் நினைத்த காரியங்கள் நடப்பதில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் ஏற்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் மதிப்பு மேம்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சகோதர வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.

தனுசு

சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும்.

கும்பம்

உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் பிறக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும்.

மீனம்

கடன் பிரச்னைகள் ஓரளவு குறைய வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நன்மை நிறைந்த நாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்