தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (04.05.2024):'தடை அதை உடை.. முன்னேற்றம் உண்டாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய ராசி பலன்கள் இதோ!

Today Rasipalan (04.05.2024):'தடை அதை உடை.. முன்னேற்றம் உண்டாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய ராசி பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
May 04, 2024 05:57 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (மே 04) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மே 04ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
மே 04ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

மேஷம்

கருத்து வேறுபாடுகள் விலகும். மனதிற்கு இதமான சில செய்திகள் கிடைக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் விற்பனையை மேம்படுத்துவீர்கள். சக ஊழியர்களால் சில தெளிவுகள் ஏற்படும். உழைப்புக்கு உண்டான உயர்வு தாமதமாக கிடைக்கும். 

ரிஷபம்

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பயணங்களால் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். 

மிதுனம்

எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தொழில் சார்ந்த சில உதவிகள் சாதகமாக அமையும். 

கடகம்

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். தன வரவுகள் தேவைக்கேற்ப கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல் மேம்படும். அலுவலகத்தில் மதிப்பு கூடும். 

சிம்மம்

உத்தியோகப் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உதாசினமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் பொறுமை வேண்டும். 

கன்னி

சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளின் வழியில் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சலுகைகள் மூலம் மாற்றம் ஏற்படும். சுபகாரிய விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். 

துலாம்

மறைமுகப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். முதலீடு விஷயங்களில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும்.  

விருச்சிகம்

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் மதிப்பு மேம்படும். 

தனுசு

தாயார் வழியில் சில விரயங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். 

மகரம்

மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகள் சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். பிற இன மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். 

கும்பம்

தாயாருடன் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். கலைப் பொருட்கள்ன மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி குறித்த குழப்பம் நீங்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். 

மீனம்

கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் செயல்படவும். பங்கு சந்தைகளில் திட்டமிட்டு செயல்படவும். மேடைப்பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்