Today Rasipalan (25.03.2024): இன்றைய நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (25.03.2024): இன்றைய நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Today Rasipalan (25.03.2024): இன்றைய நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Mar 25, 2024 05:48 AM IST

Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 25) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 25 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
மார்ச் 25 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். மனதிற்கு விரும்பியவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். புதிய துறை சார்ந்த கலந்தாய்வில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் சேமிப்பு குறையும். வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தனவரவுகள் அதிகரிக்கும். வித்தியாசமான ஆடைகளின் மீது ஆர்வம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்பு கிடைக்கும்.

கடகம்

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். நிதானமான செயல்பாடுகளால் நன்மதிப்பு ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். உங்கள் மீதான வதந்திகள் குறையும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். தனவரவுகளின் மூலம் கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். ஜாமீன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும்.

கன்னி

மூத்த உடன்பிறப்புகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மருமகன் வழியில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.

துலாம்

நெருக்கமானவர்களிடத்தில் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் போட்டிகள் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தடைகளின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும்.

விருச்சிகம்

மனதில் பொருளாதாரம் தொடர்பான எண்ணம் மேம்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். ஆன்மிக காரியத்தில் ஈடுபாடு உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

தனுசு

தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மனதளவில் ஒருவிதமான பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் அலைச்சல் அதிகரிக்கும்.

மகரம்

வாழ்க்கைத் துணைவரின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்

திட்டமிட்ட பணிகளில் சில திருப்பங்கள் ஏற்படும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.

மீனம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் பிறக்கும். வியாபாரப் பணிகளில் லாபகரமான வாய்ப்பு ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்பு அமையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்