தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 18, 2024

Today Rasipalan (18.03.2024): 'இதுவும் கடந்து போகும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 18, 2024 06:13 AM IST

Today Horoscope: வேலை, தொழில், வருமானம், வியாபாரம் என அனைத்தும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 18) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 18 ஆம் தேதியான இன்று ஒவ்வொரு ராசிகளுக்கும் உண்டான பலன்கள் பற்றி பார்ப்போம்.
மார்ச் 18 ஆம் தேதியான இன்று ஒவ்வொரு ராசிகளுக்கும் உண்டான பலன்கள் பற்றி பார்ப்போம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். கொடுக்கல், வாங்கலில் பொறுமை வேண்டும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். கவனம் வேண்டிய நாள்.

ரிஷபம்

பழைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று ஜாமின் தொடர்பான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. ரகசியமான முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்பு கைகூடும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

சிலருக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் ஆதரவு ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் குறையும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

துலாம்

மனதளவில் புதிய பாதை புலப்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். செலவு நிறைந்த நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு

உயர் அதிகாரிகளிடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

மகரம்

சிலருக்கு அரசு வழியில் அனுகூலம் உண்டு. இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். மனதளவில் புதிய தெளிவு ஏற்படும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இன்று வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மீனம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார சிக்கல்களை சமாளிக்கும் வாய்ப்பு உருவாகும். மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சக ஊழியர்களால் திருப்தி ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். பெரியார்களின் ஆலோசனை கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்