Today Rasipalan (09.03.2024):'இன்றைய நாள் சூப்பரா? சுமாரா?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இன்று (மார்ச் 09) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (மார்ச் 09) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். வழக்குகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடிவரும்.
ரிஷபம்
எதிர்பாராத சில நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமகும். பத்திரம் தொடர்பான பணிகளில் சற்று விவேகம் வேண்டும். அரசு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். மற்றவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பீர்கள்.
மிதுனம்
வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவருடன் மனம்விட்டு பேசுவதால் மகிழ்ச்சி உண்டாகும். நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.
கடகம்
பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். சகோதரர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும்.
சிம்மம்
தனிப்பட்ட விஷயங்களில் கவனமாக செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆரோக்கியமற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். மாற்றம் ஏற்படும் நாள்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும். வெளிநாடு தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.
துலாம்
கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். போட்டி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
மறதி குறையும் நாள். கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். நறுமணப் பொருட்களால் ஆதாயம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் தெளிவு உண்டாகும்.
தனுசு
சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். புதுவிதமான ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.
மகரம்
நெருக்கமானவர்களிடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். நண்பர்களின் வழியில் வருமான வாய்ப்புகள் அமையும். ஆன்மிக சிந்தனைகள் மேம்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே இன்று கவனமாக செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும்.
மீனம்
கடன் பிரச்னைகள் குறையும். அடுத்தவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன் - மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சகோதரர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்