Today Rasipalan (07.03.2024): ‘பொறுமை வேண்டும்.. பகை விலகும்’ - இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (மார்ச் 07) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும்.
ரிஷபம்
குடும்பத்தில் அமைதி ஏற்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வேலையாட்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். நிதானம் வேண்டிய நாள்.
கடகம்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தந்திரமான சில விஷயங்களால் லாபத்தை உருவாக்குவீர்கள். அதிகாரிகளிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
சிம்மம்
உறவினர்களிடத்தில் மதிப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். கவலை விலகும் நாள்.
கன்னி
எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும்.
துலாம்
சிலருக்கு நினைத்த வேலைகளில் தாமதம் உண்டாகலாம். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். இழுபறியாக இருந்துவந்த சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சிந்தனைகளில் கவனம் வேண்டும்.
விருச்சிகம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.
தனுசு
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். எதிர்பாராத சில தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். பேச்சு வன்மையால் காரிய அணுகூலம் ஏற்படும். வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும்.
மகரம்
செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் காலதாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கும்பம்
நினைத்ததை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் மேம்படும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பகை விலகும்.
மீனம்
பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்