தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 06, 2024

Today Rasipalan (06.03.2024): ‘கவலை மறையும்..தன்னம்பிக்கை பிறக்கும்’ -12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 06, 2024 05:15 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (மார்ச் 06) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 06ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
மார்ச் 06ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

உறவினர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். இன்று சிலருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கவலை மறையும் நாள்.

ரிஷபம்

வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அடுத்தவர்களை நம்பி செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும்.

மிதுனம்

உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு தேவை. சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

கடகம்

வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களுடன் மனம்விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும்.

கன்னி

அடுத்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடத்தில் அமைதி வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் பிறக்கும். ஆசை நிறைந்த நாள்.

துலாம்

வியாபாரத்தில் சில திருப்பங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆக்கப்பூர்வமான நாள்.

விருச்சிகம்

சுற்றி இருப்பவரிடம் அனுசரித்துச் செல்லவும். தொழிலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் மனஅமைதி உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். முயற்சி மேம்படும் நாள்.

மகரம்

இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

கும்பம்

நண்பர்களிடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். ரகசிய முதலீடுகளில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மீனம்

கவலைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்