தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 05, 2024

Today Rasipalan (05.03.2024): ‘தடை அதை உடை’..மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Mar 05, 2024 05:15 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (மார்ச் 05) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 05ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
மார்ச் 05ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

உத்தியோகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் மறையும்.

ரிஷபம்

விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உழைப்பிற்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

மிதுனம்

வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும்.

கடகம்

உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு செய்வதற்கான ஆலோசனை கிடைக்கும்.

சிம்மம்

இழுபறியான சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.

கன்னி

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம்

உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய முடிவுகளில் பொறுமை தேவை.

விருச்சிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் சில பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மறதி சார்ந்த பிரச்னை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடை விலகும் நாள்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். பழைய கடன் பிரச்னைகள் குறையும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். திறமை வெளிப்படும் நாள்.

கும்பம்

வியாபாரப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சாதகமாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் குறையும்.

மீனம்

உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்