தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For March 01, 2024

Today Rasipalan (01.03.2024): மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்? - இன்றைய ராசி பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Mar 01, 2024 05:46 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மார்ச் 01 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
மார்ச் 01 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்படும். அனுகூலம் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மற்றவர்களின் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

ரிஷபம்

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழப்பம் விலகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலை பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சேமிப்பு விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும்.

மிதுனம்

சகோதரர் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கடகம்

கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். ஹோட்டல் உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் நிதானம் வேண்டும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

கன்னி

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடிவரும்.

தனுசு

குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும்.

மகரம்

பயணங்களின் மூலம் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும்.

கும்பம்

தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

மீனம்

மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். லாபம் நிறைந்த நாள்.

WhatsApp channel

டாபிக்ஸ்