தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (04.07.2024): இன்று அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Today Rasipalan (04.07.2024): இன்று அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jul 04, 2024 05:14 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 04) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (04.07.2024): இன்று அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Today Rasipalan (04.07.2024): இன்று அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

மேஷம்

இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். மனதளவில் சில தெளிவுகள் ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். 

ரிஷபம்

எதிலும் நேர்மறை சிந்தனையுடன் செயல்படவும். மற்றவர்களின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். புதிய நபர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். மனதளவில் இறுக்கமான சூழல் உண்டாகும். 

மிதுனம்

இரவு நேர பயணங்களை குறைத்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணையிடம் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. பிற இன மக்களின் நட்பு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். 

கடகம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சிக்கலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். 

சிம்மம்

பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.

கன்னி

உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மாணவர்களுக்கு புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் முயற்சிகேற்ப லாபம் கிடைக்கும்.

துலாம்

கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து முடிவெடுக்கவும். கூட்டாளிகளிடத்தில் சில சங்கடங்கள் தோன்றும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் பணிகளை முடிப்பது நல்லது. தம்பதிகளுக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும்.

விருச்சிகம்

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுப காரிய முயற்சிகள் பலிதமாகும்.

தனுசு

அரசு காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். மற்றவர்களால் ஆதாயம் அடைவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். பயணத்தின் பாதுகாப்பை அறிந்து மேற்கொள்ளவும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும்.

மகரம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நினைத்த காரியத்தில் புதிய வியூகங்களை அமைப்பீர்கள்.

கும்பம்

குடும்பத்தினரிடம் புரிதலின்மை ஏற்படும். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான சூழல் உண்டாகும். நிதானமுடன் செயல்படுவது நன்மையை தரும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிக்கனமாக செலவு செய்வது பொருளாதார நெருக்கடியை தவிர்க்கும்.

மீனம்

நண்பர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிறு தூர பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தை பெருக்குவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்