தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (07.07.2024): இந்த ஞாயிறு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Today Rasipalan (07.07.2024): இந்த ஞாயிறு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Jul 07, 2024 05:58 AM IST

Today Rasipalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 07) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan (07.07.2024): இன்று ஞாயிறு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Today Rasipalan (07.07.2024): இன்று ஞாயிறு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Today Rasipalan: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேம்படும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். எதிலும் முன்யோசனையின்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.

ரிஷபம்

உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும். நெருக்கடிகள் விலகும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். சகோதரர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.

மிதுனம்

வரவைவிட செலவுகள் மேம்படும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும்.

கடகம்

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவுடன் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நிதானமாக செயல்படவும்.

சிம்மம்

கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். முயற்சி நிறைந்த நாள்.

கன்னி

உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். நிதானமான செயல்களால் நன்மை ஏற்படும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். செலவு நிறைந்த நாள்.

துலாம்

பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் தெளிவு உண்டாகும். கோபத்தை குறைத்துக் கொள்ளவது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வேலையை தொடங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். நினைத்த சில காரியத்தை செய்து முடிப்பீர்கள். பிடிவாத போக்கை தளர்த்திக் கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பொருட்களால் லாபம் மேம்படும்.

தனுசு

எதிர்பாராத பண வரவு கிடைக்கும். சகோதரர்களுடன் அனுசரித்து செல்லவும். சவாலான சூழல்களை எதிர்கொள்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம்

வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மை தரும். நெருக்கடிகள் உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செய்வது நல்லது. வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.

கும்பம்

திடீர் செலவுகள் உண்டாகும். மனைவி வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். மனதளவில் தெளிவு கிடைக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணி நிமிர்த்தமான பயணம் உண்டாகும்.

மீனம்

குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். எதிரிகள் விலகி செல்வார்கள். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9