Today Rasipalan (20.01.2024): எதிர்பார்ப்பு நிறைவேறுமா? - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (20.01.2024): எதிர்பார்ப்பு நிறைவேறுமா? - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (20.01.2024): எதிர்பார்ப்பு நிறைவேறுமா? - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Jan 20, 2024 05:00 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (ஜனவாி 20) எப்படி அமையப் போகிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி 20ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு காணலாம்.
ஜனவரி 20ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு காணலாம்.

மேஷம்

எதிர்பாராத சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்

எந்த செயலையும் பொறுமையுடன் செய்வது நல்லது. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். முடிந்து போன நிகழ்வுகளைப் பற்றி பேச வேண்டாம். அலுவலக ரகசியங்களில் கவனத்துடன் செயல்படவும்.

மிதுனம்

அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகளிடம் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் விமர்சன கருத்துகளை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும்.

கடகம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சியடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பணம் சேர்க்கைக்கான வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியம் கைகூடிவரும்.

சிம்மம்

நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். நெருக்கடியான சில பிரச்னைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனவரவுகளால் திருப்தி உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

துலாம்

குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்படும்.

விருச்சிகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பண விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்பு உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வேலையில் மாற்றம் ஏற்படும்.

தனுசு

உறவுகளின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். அரசு சார்ந்த காரிய அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் தேவைகள் நிறைவேறும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும்.

மகரம்

ஆடம்பர செலவுகளை குறைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல் உண்டாகும். புதுவிதமான கனவுகள் பிறக்கும்.

கும்பம்

முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். எதிர்பார்த்த வரவுகள் கைகூடும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் விலகும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சி இல்லாத சூழல் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

குடும்பத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வருமானத்தில் இருந்துவந்த தடை விலகும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner