Today Rasipalan (17.01.2024): 'பொறுமையுடன் செயல்படவும்'- 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் காணும் பொங்கலான இன்று (ஜனவாி 17) எப்படி அமையப் போகிறது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
வரவுக்கு ஏற்ப செலவு ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் உழைப்பு மேம்படும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
ரிஷபம்
நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் லாபம் மேம்படும்.
மிதுனம்
உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். அலுவலகத்தில் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
கடகம்
ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதில் திருப்தியான சூழல் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
சிம்மம்
சிறு சிறு விமர்சன பேச்சுக்கள் தோன்றும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துச் செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கான வாய்ப்பு உண்டாகும்.
கன்னி
சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். வெளி உலகில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
துலாம்
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
புதிய செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் கவனம் வேண்டும்.
தனுசு
உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். பூர்வீக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும்.
மகரம்
உழைப்பிற்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். வாகன மாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
கும்பம்
காரிய அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குழந்தைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும்.
மீனம்
இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்படுவதால் மேன்மை உண்டாகும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. எதிலும் படபடப்பின்றி பொறுமையுடன் செயல்படவும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்