Today Rasipalan(11.02.2024): 'இந்த நாள் உங்களுக்கு எப்படி? '..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan(11.02.2024): 'இந்த நாள் உங்களுக்கு எப்படி? '..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள்!

Today Rasipalan(11.02.2024): 'இந்த நாள் உங்களுக்கு எப்படி? '..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Feb 11, 2024 04:45 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 11 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 11 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கும் உண்டான பலன்களை இங்கு காணலாம்.
பிப்ரவரி 11 ஆம் தேதியான இன்று 12 ராசிகளுக்கும் உண்டான பலன்களை இங்கு காணலாம்.

மேஷம்

சுபகாரிய முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.

ரிஷபம்

சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும்.

மிதுனம்

மனதளவில் புதிய தெளிவு உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிப்புகளின் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும்.

கடகம்

செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மனதளவில் ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை ஏற்படும். தனவரவுகள் தாமதமாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

சிம்மம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும்.

கன்னி

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழக்கவழக்கங்கள் மூலம் மேன்மை அடைவீர்கள்.

துலாம்

உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.

விருச்சிகம்

நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும். கடன்களை தீர்ப்பதற்கான உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

தனுசு

சொத்து பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். லாபம் நிறைந்த நாள்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அனுபவம் மேம்படும். தனவரவுகள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனை கிடைக்கும்.

கும்பம்

பழைய நினைவுகளால் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும்.

மீனம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். வாகன பயணங்களில் மிதவேகம் நன்று. மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். விவேகமான செயல்பாடுகள் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். கவனம் வேண்டிய நாள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்