தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For February 10, 2024

Today Rasipalan(10.02.2024): 'ரிலாக்ஸ் ப்ளீஸ்'..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Feb 10, 2024 04:45 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 10 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 10ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
பிப்ரவரி 10ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

சுபகாரிய முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்னைகள் குறையும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமை வெளிப்படும்.

ரிஷபம்

உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். தொழிலில் புதிய மாற்றம் பிறக்கும். ப

மிதுனம்

உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். காப்பீடு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். சகஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

கடகம்

எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் கவனம் தேவை. நண்பர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கவும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும்.

சிம்மம்

பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.

கன்னி

கனிவான பேச்சுக்களால் மதிப்பு மேம்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

செலவு நிறைந்த நாள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பொன், பொருட்சேர்க்கை சார்ந்த சிந்தனை மேம்படும்.

விருச்சிகம்

நன்மை நிறைந்த நாள். சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய விஷயங்களில் நிதானத்தோடு செயல்படவும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும்.

தனுசு

கடன் பிரச்னைகள் குறையும். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடிவரும். அலுவலகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும்.

மகரம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் அணுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்

வெற்றி நிறைந்த நாள். கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். உதவி செய்வோரின் சுயரூபங்களை அறிவீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.

மீனம்

திடீர் பயணங்களால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமான முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்