Today Rasipalan (07.02.2024): 'துணிவே துணை'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 07 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி என்று பார்க்கலாம்
மேஷம்
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
ரிஷபம்
அலுவலகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் இழுபறியான சூழ்நிலை உண்டாகும். முன் பின் தெரியாதவர்களிடம் கவனம் வேண்டும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். வாகனப் பயணங்களில் நிதானம் தேவை. விவேகம் வேண்டிய நாள்.
மிதுனம்
மனதளவில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். திறமைக்கான மதிப்பு கிடைக்கும்.
கடகம்
திடீர் வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். பெரியோர்களின் சந்திப்பினால் மனதில் மாற்றம் உண்டாகும். வியாபாரம் சார்ந்த பயணங்களில் ஆதாயம் ஏற்படும். கடன் பிரச்னைகள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்
உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேம்படும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள்.
கன்னி
சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் உண்டாகும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். கல்விப் பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்
சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். திடீர் தனவரவுகளால் நெருக்கடிகள் குறையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
விருச்சிகம்
நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வாக்கு வன்மையால் மேன்மை உண்டாகும்.
தனுசு
வழக்கு விஷயங்களில் எதிர்பாராத முடிவு கிடைக்கும். நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தோன்றி மறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
மகரம்
குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். சிலருக்கு மறைமுக தடைகள் படிப்படியாக குறையும். பொறுமை வேண்டிய நாள்.
கும்பம்
ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் வருகையால் தெளிவு உண்டாகும். நெருக்கடியான சில பிரச்னைகள் குறையும். வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும்.
மீனம்
வியாபாரம் தொடர்பான சிந்தனை மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வர்த்தகத்தில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சிலருக்கு பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்