தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For February 05, 2024

Today Rasipalan (05.02.2024): மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கும் உாிய இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Feb 05, 2024 06:34 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 05 ஆம் நாளான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பிப்ரவரி 5ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
பிப்ரவரி 5ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

மனக்குழப்பம் ஏற்படும். மற்றவரிடம் தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்க்கவும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.

ரிஷபம்

குழந்தைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டு. தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்

உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும்.

கடகம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

சிம்மம்

பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.

கன்னி

குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணங்களால் லாபம் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம்

குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிட்டும்.

விருச்சிகம்

நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். 

தனுசு

இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.

மகரம்

உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் குறையும்.

கும்பம்

குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

மீனம்

வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். எதிர்பார்த்த பணவரவுகளில் சிறு இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்