Today Rasipalan (04.02.2024):'எல்லாம் தேடி வரும்'..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 04 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி என்று பார்க்கலாம்.
மேஷம்
ரகசியமான செயல்பாடுகளால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் விவாதங்களை குறைத்துக் கொள்ளவது நல்லது. அதிக நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்களை தெரிவிக்கவும்.
ரிஷபம்
காரிய அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும்.
மிதுனம்
மேன்மை உண்டாகும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். ஆன்மிகம் சார்ந்த எண்ணங்கள் தோன்றும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆக்கப்பூர்வமான நாள்.
கடகம்
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. எதிர்காலம் சார்ந்த சிந்தனை மேம்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்
சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்பு கிடைக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதாரத்தில் ஏற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.
கன்னி
பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.
துலாம்
திட்டமிட்ட காரியத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் சந்திப்பு உண்டாகும். வருமான வாய்ப்பு மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும்.
விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உணவு விஷயங்களில் கவனம் தேவை. தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
தனுசு
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். தேவையில்லாத விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். செல்போன் வழியாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் விவாதம் தோன்றி மறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
மகரம்
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணம் மேம்படும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும்.
கும்பம்
மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களில் சிந்தித்துச் செயல்படவும். அரசு வழியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும்.
மீனம்
வருமானத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான சில செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு முடிவு கிடைக்கும். மனதில் எதிர்கால சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்