Today Rasipalan (02.02.2024): 'பொறுமை தேவை'....மேஷம் முதல் மீனம் வரையான இன்றைய ராசிபலன்கள்!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் பிப்ரவரி 2 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி என்று பார்க்கலாம்.
மேஷம்
வர்த்தகப் பணிகளில் கவனம் தேவை. உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். வெளியூர் சார்ந்த பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம்
சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். சொத்து விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதில் இறை சார்ந்த சிந்தனை ஏற்படும். மற்றவர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். செயல்பாடுகளில் சுதந்திரம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
கடகம்
உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் அலைச்சல் உண்டாகும். எதிலும் சிக்கனமாக செயல்படவும். கூட்டுத் தொழிலில் சாதகமான வாய்ப்பு உண்டாகும்.
சிம்மம்
மறதி குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறுகிய தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில இடமாற்றங்கள் சாதகமாகும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
கன்னி
எதிர்பாராத சிலருடைய சந்திப்பு உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். முகத்தில் பொலிவு மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
துலாம்
தோற்றப் பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. திறமைகளை வெளிப்படுத்துவதில் நிதானம் வேண்டும்.
விருச்சிகம்
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். தந்தை வழியில் புரிதல் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
தனுசு
வியாபாரத்தில் லாபம் மேம்படும். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உடன் இருப்பவர்கள் உதவியால் அனுகூலம் ஏற்படும். வேளாண் பணியில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும்.
மகரம்
எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். சிறு தூர நடை பயிற்சிகளால் மனஅமைதி உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேளாண் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். சமூகப் பணிகளில் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
மீனம்
பலதரப்பட்ட சிந்தனைகளால் மனஅமைதி குறையும். காப்பீடு துறைகளில் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் சிந்தித்துச் செயல்படவும். செயல்பாடுகளில் சிறு சிறு தாமதங்கள் உண்டாகும். அஞ்ஞான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்