Today Rasipalan (20.12.2023): இந்த நாள் உங்களுக்கு எப்படி ?.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (டிசம்பர் 20) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பொறுமையோடு செயல்படுவது நல்லது.
ரிஷபம்
நினைத்த காரியம் கைகூடும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். வீடு விற்பனையில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.
மிதுனம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கடகம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும்.
சிம்மம்
சந்தேக உணர்வுகளை தவிர்க்கவும். முக்கியமான கோப்புகளை கவனத்துடன் கையாள வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.
கன்னி
மனைவி வழியில் நல்ல செய்தி கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
துலாம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். வெளிவட்டாராத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
உறவுகளின் வழியில் சாதகமான சூழல் அமையும். எதிர்காலம் தொடர்பான தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உயர்கல்வியில் ஆர்வம் ஏற்படும்.
தனுசு
நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.
கும்பம்
இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் நெருக்கடியான சூழல் மறையும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
மீனம்
புதிய முயற்சிகளில் ஆலோசனை பெறவும். வியாபாரத்தில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக நடைபெறும். அலுவலகத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்