Today Rasipalan (09.12.2023): இந்த நாள் சுகமா? சோகமா?.. 12 ராசிகளுக்கான உரிய பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (09.12.2023): இந்த நாள் சுகமா? சோகமா?.. 12 ராசிகளுக்கான உரிய பலன்கள் இதோ!

Today Rasipalan (09.12.2023): இந்த நாள் சுகமா? சோகமா?.. 12 ராசிகளுக்கான உரிய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Dec 09, 2023 05:20 AM IST

Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (டிசம்பர் 09) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

டிசம்பர் 9ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
டிசம்பர் 9ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். தேவையற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள்.

ரிஷபம்

கடன் பிரச்னைகள் குறையும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களுக்கு வாய்ப்புண்டு. எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்பு மேம்படும். எதிர்ப்புகளைச் சாமர்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் குறையும்.

மிதுனம்

வியாபாரப் பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்னைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும்.

கடகம்

வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

சிம்மம்

சகோதரர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். குழந்தைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.

துலாம்

தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த விரயம் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். கற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி நிறைந்த நாள்.

மகரம்

கடன் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

கும்பம்

பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொன் நகைகளில் கவனம் வேண்டும். வெளிவட்டாரங்களில் இருந்துவந்த சங்கடங்கள் குறையும்.

மீனம்

நண்பர்களிடம் தேவையில்லாத கருத்துகளை பேசுவதைத் தவிர்க்கவும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனைகளைப் பெறவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிக்கும் போது விவேகத்துடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner