Today Rasipalan(03.12.2023): இந்த நாள் உங்களுக்கு சுமாரா? சூப்பரா? - இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today Horoscope: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (டிசம்பர் 03) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
தனவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் சாதகமான சூழல் அமையும். சிலரின் சந்திப்புகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
ரிஷபம்
பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சாதகமாகும். செலவுகள் நிறைந்த நாள்.
மிதுனம்
வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் நல்ல செய்தி வந்து சேரும். பணவரவு சிறப்பானதாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும்.
கடகம்
மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் சுபச்செலவுகள் உண்டாகும்.
சிம்மம்
பொருளாதார ரீதியாக இருந்துவந்த பிரச்னைகள் சரியாகும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். நண்பர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும்.
கன்னி
பெற்றோரிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் வழியில் லாபம் மேம்படும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். உத்தியோகத்தில் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.
துலாம்
தனவரவு தாராளமாக இருக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பொருளாதார நிலை உயரும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
விருச்சிகம்
நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் நலனில் கவனம் வேண்டும். சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும்.
தனுசு
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும்.
மகரம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும்.
கும்பம்
எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தெளிவு பெறும். பழைய கடன் பாக்கிகளைக் குறைப்பீர்கள். வியாபாரப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்பும், அதிகாரமும் அதிகரிக்கும்.
மீனம்
குடும்ப பிரச்னைகள் நீங்கும். தற்போதைய தேவைகள் பூர்த்தியாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்