தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (20.04.2024): 'வெற்றி நிச்சயம்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Today Rasipalan (20.04.2024): 'வெற்றி நிச்சயம்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Apr 20, 2024 05:15 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 20) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 20ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
ஏப்ரல் 20ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

மேஷம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவினர்களின் வழியில் மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.  

ரிஷபம்

நண்பர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். கடன் சார்ந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதளவில் தெளிவு ஏற்படும்.

மிதுனம்

பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். உறவினர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். வியாபாரம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும்.

சிம்மம்

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமை காக்கவும்.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும்.

துலாம்

பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். புது தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சேமிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும்.

விருச்சிகம்

குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் உண்டாகும். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிவீர்கள்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில தனவரவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் விவேகம் வேண்டும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும்.

மகரம்

அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களால் அலைச்சல் ஏற்படும். தனம் சார்ந்த உதவிகளில் தாமதம் உண்டாகும். விவேகத்துடன் நடந்து கொள்வது நன்மதிப்பை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்லவும்.

கும்பம்

புதிய நபர்களின் நட்பால் உற்சாகம் உண்டாகும். சகோதரர்களின் வழியில் ஆதாயம் அடைவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

மீனம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரம் சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்