தமிழ் செய்திகள்  /  Astrology  /  Horoscope Today, Tamil Astrological Prediction For April 01, 2024

Today Rasipalan (01.04.2024): 'மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Apr 01, 2024 06:38 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு மாதத்தின் கடைசி நாளான இன்று (ஏப்ரல் 01) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 01ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
ஏப்ரல் 01ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்

வியாபாரம் ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும்.

ரிஷபம்

எதிலும் கவனத்தோடு செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனை மேம்படும். போட்டி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. அனுபவம் மேம்படும் நாள்.

மிதுனம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

கடகம்

திடீர் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும்.

சிம்மம்

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

கன்னி

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பயணம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும்.

துலாம்

மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்தியை தரும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். இறைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

விருச்சிகம்

எதிர்பார்த்த உதவிகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உறவினர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு ஏற்படும். தொழிலில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள்.

தனுசு

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதற்கான சூழல் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும்.

மகரம்

விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள்.

கும்பம்

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடிவரும். வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும்.

மீனம்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான எண்ணங்கள் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்