Kolanjiappar Temple: சிக்கலைத் தீர்க்கும் முருகன்!
எப்பிரச்னைகள் ஏற்பட்டாலும் இக்கோயிலில் உள்ள முருகனை வேண்டினால் தீரும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மணவாள நகரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோயில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும் இந்த திருக்கோயில். கோயில் இருந்த பகுதி அடர்ந்த காடுகளாக காட்சியளித்து வந்த நிலையில் கொளஞ்சி செடியின் நடுவே பலிபீடத்தின் மேல் பசுமாடு ஒன்று தானாக பால் சொறிந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
அந்த பலிபீடம் புனித தெய்வம் என்று கருதிய பக்தர்களும் வழிபடவும் தொடங்கினர். இந்நிலையில் சாமி உருவம் என்று இருந்தமையால் எந்த தெய்வம் என கண்டறிவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் ஆராய்ந்த போதுதான் திருமுதுகுன்றத்தில் ஈசனாகிய பரம்பொருளும் பக்தன் சுந்தரருடன் விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் சுந்தரர் தமக்காக பாடல் பாடாமல் செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருபிக்க செய் என்று கூறுவே முருகனும் அவ்வாறு செய்து காட்சி அளித்த இடம் என வரலாறு கூறுகின்றது.
குடும்ப பிரச்னை, தீராத நோய், வழக்கு பிரச்னை என எப்பிரச்னைகள் ஏற்பட்டாலும் இக்கோயிலில் உள்ள முருகனை வேண்டினால் தீரும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இக்கோயிலின் முகப்பில் வீரனார் ஆலயம், கொளஞ்சியப்பருக்கு கிழக்கு கோபுரம், வடக்கு கோபுரம் என இரண்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொளஞ்சியப்பரை அடையாளம் காட்டிய பசுவின் சிற்பம் பீட வடிவில் தோன்றி பெருமானுக்கு பால் சொரிவது போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. சித்தி விநாயகரின் கருவறையின் மேலே வட்ட வடிவிலான விமானம் அமைக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் நாற்புரமும் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, திருமால் , பிரம்மாவின் சிற்பங்களை காணலாம். பீட வடிவில் உள்ள கொளஞ்சியப்பருக்கு கிரீடம் சூட்டி வெள்ளியால் கண்ணமைத்து பீடத்தின் கீழே முருகனின் ஆறு எழுத்து மந்திரமான சரவணபவ சடாச்சரம் சாத்தி வேல் ஏந்திய நிலையில் அழகுற காட்சி அளிக்கின்றார் முருகப்பெருமான்.
திருக்கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஒரே கருவறையில் இடுபடும் கடம்பனும் நின்ற காலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குரு அகப்பை சித்தர் இந்த திருத்தலத்தில் ஜீவசக்தி பெற்றுள்ளார். இக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது மட்டுமல்லாமல் நான்கு கால பூஜைகளும் சிறப்புடன் நடந்து வருகின்றது.