Lalitankura Cave Temple: சிற்பக் கலைக்கூடம் மலைக்கோட்டை குடைவரைக் கோயில்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lalitankura Cave Temple: சிற்பக் கலைக்கூடம் மலைக்கோட்டை குடைவரைக் கோயில்!

Lalitankura Cave Temple: சிற்பக் கலைக்கூடம் மலைக்கோட்டை குடைவரைக் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 20, 2022 06:48 PM IST

காலங்களைக் கடந்து நிற்கும் சிற்பக் கலைக்கூடம் இந்த மலைக்கோட்டை குடைவரைக் கோயில்.

மலைக்கோட்டை குடைவரைக் கோயில்
மலைக்கோட்டை குடைவரைக் கோயில்

சிவபெருமான் விரும்பி கேட்டதனால் அமைக்கப்பட்ட கோயில் லலிதாங்குற பள்ளிவேஸ்சர கிரகம். தெற்கு நோக்கி அமைந்த கோயிலில் மேற்கு நோக்கிய கருவறை பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் பெண் தெய்வ வழிபாடு குறித்த முதல் கல்வெட்டும் இங்குதான் உள்ளது.

சோழர்களை வெற்றி கொண்டு சிராப்பள்ளியை கைப்பற்றிய சிம்ம விஷ்ணுவிற்கு மகனாக பிறந்து ஏறத்தாழ 40 ஆண்டுகள் பல்லவ பேரரசை வழிநடத்திய முதலாம் மகேந்திரவர்மனிடம் நில மட்டத்தில் அமைந்துள்ள கோயிலில் நின்று கொண்டு சோழர்களின் மகத்தான ஆற்றலையும், காவிரி நதியையும் நான் எப்படி பார்க்க முடியும் என்று சிவபெருமான் கேட்டார்.

தம் காலத்திலும் அதற்கு முன்னும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட செங்கல் மரம் உலோகம் சுண்ணாம்பு இல்லாமல் புதிதாக முற்றிலும் மாறுபட்டதொரு கட்டுமானமாக அமைக்கப்பட்ட குடைவரை இது. இங்குள்ள கல்வெட்டு மன்னன் மகேந்திரவர்மன் சைவ சமய அப்பர் முயற்சியினால் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறியதை கூறுகிறது.

ஏட்டில் இல்லாமல் கல்லில் பொறிக்கப்பட்ட நிலையில் முழுமையான முதல் தமிழ் இலக்கியம் இங்குதான் உள்ளது. 104 வரிகளில் இரு பிரிவுகளில் அடங்குமாறு அமைக்கப்பட்டது சிராப் பள்ளி அந்தாதி. மேற்பரப்பு கங்காதர சிற்பக் காட்சி பல்லவர்களின் சிற்பக் கலை திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மலையின் அடிவாரத்தில் மற்றொரு குடைவரை கோயில் உள்ளது. மலையின் மேலே இருக்கும் கோயிலை விட இது அளவில் பெரியது. குகைக் கோயிலில் இரு கருவறைகள் உள்ளன. இவை சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் உரியவை ஆகும்.

கருவறை முன்னால் உள்ள மண்டபற்றவர்களில் பிரம்மன், கணேசன், சுப்பிரமணியர், சூரியன், துர்க்கை ஆகிய திரு உருவங்கள் வியக்கத்தக்க சிற்பங்களாக அமைந்துள்ளன. காலங்களைக் கடந்து நிற்கும் சிற்பக் கலைக்கூடம் இந்த மலைக்கோட்டை குடைவரைக் கோயில்.

Whats_app_banner