நீல நிறத்தில் காட்சி அளிக்கும் ஆதிரெத்தினேஸ்வரர்!
தேவாரப் பாடல் பெற்ற 274வது தலமான ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அமைந்துள்ளது ஆதிரெத்தினேஸ்வரர் கோயில். இங்கு சிநேகவள்ளி என்ற நாமத்தில் அம்மன் அருள்காட்சி தருகின்றார். இந்த கோயில் 500 ஆண்டுகள் பழமையானது.
திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய தலமாகவும் தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களை இது ஒன்பதாவது தலமாகவும் விளங்குகின்றது. சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களை இது 199 ஆவது தேவாரத் தலமாகும். கோயிலின் கோபுரம் மிகவும் உயரமானதாகவும் ஒன்பது நிலையும் 130 அடி கொண்டதாகவும் அமைந்துள்ளது.
ஆதிரெத்தினேஸ்வரர் மீது உச்சி காலத்தில் பாலபிஷேகம் செய்தால் ஈசன் நீல நிறத்தில் காட்சி அளிக்கின்றார். ஒருமுறை அர்ஜுனன் வனவாசத்தின் போது பசுபதாஸ்திரம் பெற்ற பின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்கச் சென்றார்.
திருவாடானைக்கு வந்தால் சொல்லித் தருகிறேன் என்றார் சிவன். அதன்படி அர்ஜுனனும் எந்த தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுத் தெரிந்து கொள்கின்றார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டாக இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.
சூரியனின் கர்வம் போக்கிய தலமாகவும் இத்தலம் விளங்கி வருகின்றது. சூரியனுக்கு ஏற்பட்ட கர்வத்தைப் போக்க எண்ணிய இறைவனும் ஈசனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு சூரிய ஒளி போய்விட்டது.
இதனையடுத்து மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்க திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு நீலக்கல்லில் ஆவுடையமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும் எனக் கூறியுள்ளார்.
ஆதியாகிய சூரியன் நீல ரத்தினக் கல்லால் வழிபட்டதால் ஆதிரெத்தினேஸ்வரர் எனப் பெயர் பெற்றது. வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாட்கள் நடைபெறும். கோயிலில் ஆடிப்பூர திருவிழாவோ 15 நாட்களும் சிவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை சதுர்த்தி ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது