Swamimalai Swaminathaswamy: பிரம்மனை சிறைப்பிடித்த முருகப்பெருமான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Swamimalai Swaminathaswamy: பிரம்மனை சிறைப்பிடித்த முருகப்பெருமான்!

Swamimalai Swaminathaswamy: பிரம்மனை சிறைப்பிடித்த முருகப்பெருமான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 04, 2022 06:48 PM IST

ஓம் எனும் பிரணவ மந்திரத்தை முருகப்பெருமான் சிவபெருமானுக்கு உபதேசித்த சுவாமிமலை தலம் குறித்து இங்கே காண்போம்.

சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
சுவாமிநாதசுவாமி திருக்கோயில்

முருக கடவுளான சுவாமிநாத சுவாமி, ஞான காரகனாக இங்கு அருள் பாலித்து வருகின்றார். அவரை தரிசிப்பதால் ஆணவம், கர்வம், மாயை ஆகிய மூன்று மடங்களும் அழிந்து எல்லா ஞானமும் பெறுவதாக கூறப்படுகின்றது.

இவ்வாலயத்தில் 60 தமிழ் வருடங்களும் 60 படிகளாக அமைந்துள்ளது. 60 படிகளை ஏறியவுடன் விநாயக பெருமான் இங்கு நேத்ர மகாகணபதி என்ற ரூபத்தில் அருள் பாலித்து வருகின்றார். இங்குள்ள விநாயகர் கண் சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.

பின்னர் சுவாமியினுடைய மெய்க்காவலரான இடும்பன் இங்கே தனி சன்னதி கொண்டு காட்சி தருகின்றார். அவரை கடந்து சென்றார் எல்லாம் வல்ல எம்பெருமான் சுவாமிநாதன் ஞான காரகத்தாக சிவசுப்பிரமணிய சுவருபியாக சிவ பீடம் மேலே அருள் பாலிக்கின்றார்.

முதல் பிரகாரத்தில் உற்சவர் சண்முக சன்னதியும், சித்தர்களில் உயர்ந்தவராகவும் குருவத்தில் சிறியவருமான அகத்தியரும் பக்தர்களுக்கு காட்சி புரிகின்றனர். இகோயிலில் தலவிருட்சம் நெல்லிமரமாகும். அப்பனுக்கு பாடம் சொல்லித் தந்த சுப்பையா என்பதால் சுவாமிநாதன் என்ற நாமத்தில் இங்கு முருகப்பெருமான் அழைக்கப்படுகின்றார்.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முடியாத பிரம்மனை முருகப்பெருமான் சிறை பிடித்தார் பின்னர் அவரது படைப்புத் தொழிலையும் முருகப்பெருமானே செய்து வந்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற முருகனின் கூற்றுப்படி சிவபெருமான் கேட்டுக்கொண்டதால் பிரம்மனை விடுவித்தாராம்.

பிரணவ மந்திரத்தின் பொருள் அறிய முருகன் முன்பு சிவபெருமான் வாய் பொத்தி மண்டியிட்டு மாணவனாக ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருள் அறிந்த தலமே இந்த திருத்தலம்.

இங்கே வைகாசி விசாக உற்சவம் என்று சொல்லக்கூடிய சுவாமிக்கு பூணூல் அணிதல் ஆகியவையுடன் முக்கிய நிகழ்ச்சியாக கந்தசஷ்டி திருவிழா அபிஷேகமும் நடைபெறுகின்றன. பின்பு வீரர்கள் படைச்சூழ கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள அம்பாள் பீடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியுடன் சூரசம்ஹார விழாவும், மறுநாள் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறும்.

கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகை தீப திருவிழாவின் சிறப்பாக அன்றைய தினம் இக்கோயிலின் தேரோட்டமும் நடைபெறுகின்றது.

Whats_app_banner