Sattainathar Temple: தனி சன்னதியில் அருள்பாலிக்கும் திருஞானசம்பந்தர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sattainathar Temple: தனி சன்னதியில் அருள்பாலிக்கும் திருஞானசம்பந்தர்!

Sattainathar Temple: தனி சன்னதியில் அருள்பாலிக்கும் திருஞானசம்பந்தர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 29, 2022 06:15 PM IST

தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஸ்ரீ சட்டை நாதர் கோயில் 14 வது தேவார தலமாகும்.

ஸ்ரீ சட்டை நாதர் கோயில்
ஸ்ரீ சட்டை நாதர் கோயில்

அம்பாள் பெரிய நாயகியும் திருநிலை நாயகியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். தல விருட்சமாக பாரிஜாதமும், பவளமல்லியும், மூங்கிலும் அமைந்துள்ளது. இக்கோயிலின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்களாகும்.

பஞ்சரத் அடி ஆகமப்படி நித்தமும் இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவார தலமாகும். இக்கோயிலில் திறமையான சம்பந்தர் தனி சன்னதியிலும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆகியோர் வெளியே தனியாகவும் காட்சித் தருகின்றனர்.

மூலஸ்தானத்தில் விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள விநாயகர் ஞான விநாயகர் என்ற திருநாமத்துடன் காட்சி அளிக்கின்றார். இக்கோயிலில் வழக்குகளில் பிரச்னை, குழந்தை பேறு இல்லாதவர்கள் வந்து வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்சவம் தொடங்கும். இதில் இரண்டு நாள் சம்பந்தருக்கு அம்மாள் பால் தந்து உதவும் நிகழ்ச்சி பிரம்ம தீர்த்தக் கரையில் நடக்கின்றது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நெய்வேதியம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.

அழைப்புகளில் அருள்பாலிக்கும் உமாமகேஸ்வரிக்கு சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாத பிறப்பு ஆகிய நாட்கள் விசேஷமாகும். திருக்கார்த்திகை, மார்கழி, திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறுகின்றது. நவராத்திரி, தை அமாவாசை, வைகாசி, மூலம், ஆனி, ரோகிணி, ஐப்பசி, சதயம் ஆகிய நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.

Whats_app_banner