ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் தல வரலாறு
ராமேஸ்வரம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் தல வரலாறு குறித்து இங்கே காண்போம்.
ராமேஸ்வரம் அருகே உள்ள பிரப்பன் வலசையில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் தென்னகத்தில் முருகப்பெருமானின் வழிபாட்டை தீவிரமாக்கிய மகான்.
பாம்பன் சுவாமிகள் தமது 46வது வயதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரப்பன் வலசை என்னும் ஊரினை தவம் புரியத் தேர்வு செய்து அவ்வூரில் உள்ள மயான பூமியில் ஒரு குழி அமைக்கச் செய்தார். ஆறு நாட்கள் பழனி கடவுளை உள்ளத்தில் நிறுத்தி கடும் தவம் புரிந்த இவருக்கு ஏழாம் நாளில் தண்டாயுதபாணியின் தரிசனத்தையும், ஓரெழுத்து உபதேசத்தையும் அருளினார் முருகப்பெருமான்.
முருகப்பெருமானுடன் அகத்தியரையும் அருணகிரிநாதரையும் கண்டு தரிசித்தார் பாம்பன் சுவாமிகள் 6666 பாடல்களையும் 32 வியாசகங்களையும் எழுதி முருகப்பெருமானைக் கொண்டாடினார் பாம்பன் சுவாமி. தமிழகம் மட்டுமின்றி வெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகன் நாதம், கொல்கத்தா, கயா என்று காசிவரை திருத்தலை யாத்திரை மேற்கொண்ட பாம்பன் சுவாமிக்கு 1918 ஆம் ஆண்டு வெப்புநோய் பாதிப்பு ஏற்பட்டது.
அந்நேரம் குமார ஸ்தவம் எனும் ஆறு எழுத்து மந்திர நூலை இயற்றினார். அந்த பாடலால் பூரண குணமும் பெற்றார் பாம்பன் சுவாமி. ஓம் சண்முக பதையே நமோ நம எனத் தொடங்கும் இந்த மந்திர பாடல்களைப் பாடுவோர் சண்முக பெருமாள் இரு தேவியர்களோடு மகிழ்வித்து அமர்ந்த காட்சியைத் தரிசிப்பார்கள் எனச் சுவாமிகள் தமது சீடர்களுக்கு உபதேசித்தார்.
1929 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி காலை 7.15க்கு பாம்பன் சுவாமிகள் மகா சமாதி அடைந்தார். அடுத்த நாள் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் பாம்பன் சுவாமிகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, அவர் விதித்தபடி வங்கக்கடலோரம் சென்னை திருவான்மியூரில் ஸ்வாமிகளின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு மகா சமாதியும் அமைக்கப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் சிவதலமான நெல்லையப்பர் கோயிலில் ஆடல் வல்லான் எம்பெருமான் ஈசன் நெல்லையப்பராகவும், பார்வதி தேவி காந்திமதி அம்பாளாகவும் திருமணக் கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவதலமாகவும், பச்சையாற்றின் கரையில் உள்ள பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் திகழும் கோயில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கிழக்கு வாசலில் பிரதான வாசலாக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் நெல்லையப்பர் சன்னதியும் அதன் அருகில் காந்திமதி அம்மாளின் சன்னதியும் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றன. நெல்லையப்பரை நோக்கியவாறு நந்தியம்பெருமான் காட்சி தருகின்றார். கோயிலுக்குள் நுழைந்ததும் மகா மண்டபம் அமைந்துள்ளது கோவிலின் முற்பகுதியில் சுவாமி அம்பாள் சன்னதிகள் அழகு பெற அமைந்துள்ளன.
கோயிலைச் சுற்றி வலம் வர உட்பிரகாரமும் வெளிப்பிரகாரமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உட்பிரகாரத்தில் தக்ஷிணாமூர்த்தி, கன்னி விநாயகர், ஆறுமுக கடவுளான முருகப்பெருமான், சண்டிகேசுவரர், சூரியன், சந்திரன், சனீஸ்வரர், பைரவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகளும் அமைந்துள்ளன.
மேலும் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நெல்லையப்பர் சன்னதிக்கு உட்புறம் உட்பிரகாரத்தில் வாசுதேவ பெருமாள் தேவியர்களுடன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். நாகர் சன்னதியும் கோயில் முன் மண்டபத்தில் நவகிரகங்களுக்கு எனத் தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் வழிபடுகின்றனர்.
இங்குள்ள மகாமண்டபங்களில் காணப்படும் சிற்பங்கள் கண்களைக் கவரும் வகையில் மிகுந்த கலை நுட்பங்களுடன் ஜொலிக்கின்றன. ராஜகோபுரம் இல்லாத போதிலும் சுவாமி, அம்பாள் சன்னதிகளில் கோபுரங்கள் அமையப்பெற்றுள்ளன. ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசன விழா, சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை தீப விழா, திருக்கல்யாண விழா, திருவாசகம் முற்றோறுதல் விழா, பிரதோஷ விழாக்கள் மிக விவர்சையாக நடத்தப்பட்டு வருகின்றன.