தடைகள் நீக்கும் நாகநாதசுவாமி!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தடைகள் நீக்கும் நாகநாதசுவாமி!

தடைகள் நீக்கும் நாகநாதசுவாமி!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 23, 2022 06:27 PM IST

பேரையூர் நாக நாதசுவாமி கோயில் தலவரலாறு குறித்து இங்கே காண்போம்.

<p>பேரையூர் நாகநாதசுவாமி கோயில்</p>
<p>பேரையூர் நாகநாதசுவாமி கோயில்</p>

இக்கோயிலானது கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கோயில் என்றும் பின்னர் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டிய மன்னரால் புதுப்பிக்கப்பட்டது எனத் தல வரலாறு கூறுகின்றது.

தந்தையின் காலை சிதைத்த சண்டிகேசுவரர் தன் தீவினை நீங்க பேரையூரில் வந்து தவம் செய்து தீவினை நீங்கியதாகவும், பிரம்மதேவன் தான் நீராடுவதற்காகவே பல புண்ணிய தீர்த்தங்களை வருவித்து இத்திருக்குளத்தில் சேர்த்து அதில் தீர்த்தமாடி பிறையுடன் காட்சி அளித்த சிவபெருமானை வணங்கிய இடம் இந்த பேரையூர் என்றும் வரலாறு கூறுகின்றது.

இத்திருத்தலத்தில் வழிபடுவோர் யாராயினும் தனம், தானியம், மனைவி, மக்கள் முதலிய எல்லா பலாபலன்களையும் பெற்ற உய்ய வேண்டும் என்று பிரம்மதேவன் சிவபெருமானை வேண்டியதாகக் கூறப்படுகின்றது. இத்திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தின் உள்ளே இருந்து சித்திரை மாதத்தில் கோயிலில் ஒழிக்கப்படும் இசைக்கருவிகளின் ஒளி இன்றும் கேட்பதாகக் கூறப்படுகின்றது.

மேலும் எந்த சிவன் கோயிலிலும் இல்லாத வகையில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவே வள்ளி தெய்வானையோடு முருகப்பெருமான் அருள்பாலித்து வருகின்றார். தினமும் ராகு கால நேரத்தில் நாகநாத சுவாமிக்குப் பாலால் அபிஷேகமும், அர்ச்சனையும் செய்து வழிபட்டால் தோஷம் நீங்கி திருமணம் மற்றும் குழந்தை பெயர் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோயில் வளாகத்தில் உள்ள தென்னை மரம் மற்றும் மரங்கள் பாம்பு போல வளைந்து நெளிந்து உயர்ந்து நிற்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கோயிலின் மூலவராக நாகநாத சுவாமி அருள்பாலித்து வருகின்றார். 

அம்பாள் பிரகதாம்பாள் என்ற நாமத்தில் அருள்பாலிக்கின்றார். குரு தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், கால பைரவர், நவகிரகங்கள், வள்ளி தெய்வானை பாலசுப்பிரமணியரும் இவ்விடம் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

Whats_app_banner