ஸ்ரீ யோகா ராமர் கோயில் தல வரலாறு
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஸ்ரீ யோகா ராமர் கோயில் தல வரலாறு

ஸ்ரீ யோகா ராமர் கோயில் தல வரலாறு

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 04, 2022 02:30 PM IST

நெடுங்குணம் ஸ்ரீ யோகா ராமர் கோயில் தல வரலாறு குறித்து இங்கே காண்போம்.

<p>ஸ்ரீ யோகா ராமர் கோயில்</p>
<p>ஸ்ரீ யோகா ராமர் கோயில்</p>

கோயிலின் மண்டபத்தில் உள்ள தூண்கள் கலைநயமிக்க சிற்பங்களின் தொகுப்பாகவே திகழ்கின்றன. தனிக்கோயிலில் தாயார் எங்கே செங்கமலவல்லி என்னும் பெயரில் அருள்புரிகிறார். ராமன் என்றாலே வில்லும், அம்பும் தரித்து லட்சுமணன், சீதை, அனுமன் ஆகியோருடன் இருப்பார்.

இத்திருக்கோயிலில் வித்தியாசமாக ஸ்ரீ ராமபிரான் தன் திருக்கரங்களில் கோதண்டம் ஏந்தி, ஆயுதங்கள் ஏதுமின்றி அமர்ந்த நிலையில் வலது கை சிங் முத்திரையுடன் திருமார்பில் வைத்தபடி கண்களை மூடிய வண்ணம் யோக நிலையில் காட்சி தருகிறார். இது மிகவும் அபூர்வமான திருக்கோலம் தான்.

இதனாலேயே இவரை யோக ராமர் என்று அழைக்கின்றனர். ராமர் அருகே சீதாபிராட்டி அமர்ந்த நிலையில், வலக் கரத்தில் தாமரை மலரை ஏந்தியபடி காட்சி தருகிறார். அவரது இடக்கரம் திருவடி சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக விளங்குகிறது. லட்சுமணன், ராமருக்கு வலது புறத்தில் கைகளைக் குவித்து அஞ்சலி செலுத்தியவராய் திருக்கோலம் சாதிக்கிறார்.

ஸ்ரீ ராமபிரானும் சீதா பிராட்டியும் பீடத்தில் அமர்ந்து காட்சி தர அவர்கள் எதிரே அனுமன் பிரம்மசூத்திரம் படித்தபடி காட்சி தருவது இன்னும் சிறப்பானது. இது வேறு எங்குமே காணமுடியாத அற்புத காட்சியாகும். ஏன்? ராமபிரான் இவ்வாறு வில்லும் அம்பும் இன்றி காட்சி தருகிறார். அதற்கு சுகப்பிரம்ம ரிஷி என் வேண்டுகோள் தான் காரணமாம்.

தல வரலாறு

சுகப்பிரம்ம ரிஷி என் அன்பு கோரிக்கையை ஏற்று ராம பிரான் இங்கே தங்கிச் சென்றார். ராமன் ராவணனுடன் யுத்தம் முடிந்து விஜயராமன் அயோத்தி திரும்புவதால் அவரது கரத்தில் வில்லும் அம்பும் என்று காட்சி தருகிறாராம். இலங்கை சென்று ராவணனை வதம் செய்து வெற்றி வீரனாக ஸ்ரீ ராமபிரான் சீதா பிராட்டியை அழைத்துக்கொண்டு விஜயராகவனாக அயோத்தி திரும்புகிறார்.

திரும்பும் வழியில் ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் ஆசிரமத்திற்கு வந்து அருள் புரிந்து செல்லுமாறு ஸ்ரீராமனை வேண்டுகின்றனர். அவ்வாறு இங்கு வசித்து வந்த சுகப்பிரம்ம ரிஷியும் வேண்டினார்.

அவரது வேண்டுகோளின்படி, ரிஷி உடன் தங்கி உணவை ஏற்கத் தயாராகிறார் ஸ்ரீ ராமர். ஆனால் ராமபிரான் 14 ஆண்டுகளில் நாட்டுக்குத் திரும்பி வரவில்லை எனில் தான் தீக்குளித்த உயிர் மாய்ப்போம் எனப் பரதன் ஏற்கனவே சபதமிட்டு இருந்தார். அந்த நினைவு வந்ததும் அனுமனை அழைத்து, பரதனுக்குச் செய்தி தெரிவித்து அமைதிப்படுத்தி வருமாறு கூறுகிறார் ராமபிரான்.

அவ்வாறே சென்ற அனுமன் பரதனைக் காத்து அமைதிப்படுத்தி மீண்டும் ராமனிடமே வந்து செய்து சொன்னார். பின் இருவரும் அமர்ந்து ஒரே இலையில் உணவு பரிமாறிக் கொண்டதாகச் செவிவழிக் கதைகள் இங்கே கூறப்படுகின்றன. ராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் சுகப்பிரம்ம ரிஷி காட்சி கொடுத்து இங்கேயே தங்கி அருள்புரிகிறார்.

இங்கே ஸ்ரீராமபிரான் சாந்தமான கோலத்தில் அருள்புரிகிறார். இவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Whats_app_banner