Vairaperumal temple: எதிரிகளை அழிக்கும் தலம்!
சோதிலிங்க வடிவிலான அய்யர்மலை வைரப் பெருமாள் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளது சோதிலிங்க வடிவிலான அய்யர்மலை. இது மேருமலையின் ஒரு சிகரம். மலையின் அடிவாரத்தில் உள்ள கோயிலில் நுழைந்தவுடன் நூற்றுக்கால் மண்டபமும், அதில் வைரப் பெருமாள், கருப்பண்ணசாமி, ஆறுமுகப்பெருமான் சன்னதிகளும் தனித்தனியாக அமைந்துள்ளன.
இத்தலத்தில் விசேஷமானவர் வைரப் பெருமாள். இவரை வைராக்கிய பெருமாள் என்றும் அழைக்கிறார்கள். காஞ்சிபுரத்தை சேர்ந்த வைராக்கிய பெருமாள் தன்னுடைய தங்கைக்கு குழந்தை பிறந்தால் தன் சிரசை தருவதாக வேண்டினார். அதன்படியே நடக்க வைராக்கிய பெருமாள் தனது சிரசை காணிக்கையாகினார்.
மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் அமைந்துள்ளது. தேனும் தேங்காய் பாலும் மட்டுமே இவருக்கு அபிஷேகம். சுவாமிக்கு பூஜை முடிந்த பிறகு சுவாமியின் மாலை இவருக்குத்தான் போடப்படுகிறது. அதற்கு மேலாக சென்றால் இருக்கிறது கர்ப்பத்தடி கருப்பு. இது ஒரு உயரமான தூண் போல் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பில்லி, சூனியம் , கருப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளை நிற நூலை கட்டி தேங்காய், பழம், எலுமிச்சை பழம், வெட்டி குங்குமத்தில் வைத்திருப்பார்கள். பின்னர் இந்த செய்வினை கோளாறை விரட்ட கோயில் சார்பாக ஒருவர் இருந்து பூஜை செய்து கட்டுக்களை விரட்டுவார்.
இதில் செய்வினைகள் நீங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை. இது காலம் காலமாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்து அமைந்திருப்பது பொண்ணியிடும் பாறை. இங்கு சுந்தரர் பாட வந்தபோது இந்த இடத்தில் தங்கி இருந்து பாடி இருக்கிறார்.
அப்போது அவருக்கு ஈஸ்வரன் பொண் வழங்கி பாறை முழுவதும் பொண்ணாக காட்சியளித்ததாக தல வரலாறு கூறுகிறது. இந்த பெண்ணிடம் பாறையில் பங்காளிகள் செய்வினை வைத்திருந்தால் இருவரும் மனம் மாறி இங்கு வந்து திருநீறு மாற்றி சமாதானம் செய்து கொள்கிறார்கள்.
பொண்ணிடம் பாறைக்கு அருகில் உள்ள சகுன குன்றின் கீழ் அமர்ந்து காரியங்களை தொடங்குவதற்காக நற்சகுனம் பார்க்கவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பொண்ணிடம் பாறையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிகளின் வழியாக மலை நோக்கி சென்றாள் மலையின் உச்சியில் நவரத்தினங்களாக இருக்கும் இறைவன் சுயம்பு மூர்த்தி உள்ளார்.
இங்கு மலையில் உள்ள வைரப் பெருமாள் சன்னதியில் ஒரு துப்பாக்கி உள்ளது. இதில் பக்தர்கள் தங்களது வீடுகளில் திருட்டு மோசடி செய்திருந்தால் திருடியவர்களுக்கு தண்டனை அளிக்கும் வண்ணம் துப்பாக்கியில் மருந்து நிரப்பி வேண்டுதல் செய்துவிட்டு சென்றால் வைரப் பெருமாள் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக ஐதீகம்.
காவிரி தென்களித்தலங்களில் முதலாவதாக அமைந்துள்ளது அய்யர்மலை. பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் போது இந்த மலையில் ஒரு வருடம் தங்கி இருந்ததாக ஐதீகம். இது காகம் பறவாமலை, இந்த மலையில் பாம்புகள் தீண்டினால் விஷம் ஏறுவதில்லை. சுவாமிக்கு அபிஷேகம் செய்த பால் மாலை வரை கெடுவதில்லை.
அபிஷேகம் செய்த பால் சுவையான தயிராக மாறும் என்ற சிறப்புகளை பெற்றது அய்யர்மலை. கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் இந்த அய்யர்மலை அமைந்துள்ளது. இந்த கோயில் கரூர் 40 கிமீ, குளித்தலை 8 கிமீ, திருச்சி 44 கிமீ, மணப்பாறை 40 கிமீ தூரத்திலும் உள்ளது.