Venkatachalapathi Temple: 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்!
கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் போரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது எந்த வெங்கடாஜலபதி இக்கோயிலானது. 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் கட்டப்பட்டுள்ளது.
110 அடி உயரத்தில் ஐந்து நிலை வானலாவிய ராஜகோபுரம் கருங்கல்லினால் திருச்சுற்று மதில்களும் சூழப்பட்டு விசாலமான நாயகர் கட்டிடக்கலைப் பணியில் அழகுற அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் வெங்கடாசலபதி உருவம் நான்கடி உயரத்தில் கரும் கல்லால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உற்சவரான சீனிவாசனும் மூலவரைப் போலவே நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளிக்கின்றார். இக்கோயிலில் மொத்தம் 42 அழகு மிளிரும் சிலைகளை காணலாம். இவை உலக புகழ்பெற்றவை.
ஆடை அணிகலன்கள் தத்ரூபமாக இந்த சிற்பங்களில் காணப்படுகின்றன. கை மற்றும் கால்களில் ஓடும் நரம்புகள் கூட தெளிவாக தெரிகின்றன. சிற்பக்கலைக்கு இத்தலம் பெயர் பெற்றதாகும். இவ்விடம் உள்ள ஆறு தூண்கள் மிக நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட சிற்பங்களை உள்ளடக்கியுள்ளன.
தலவிருட்சமாக புன்னை மரம் காணப்படுகின்றது. புரட்டாசி மாதம் பக்தர்கள் பெருமளவு இந்த தலத்திற்கு வருகை புரிகின்றனர். திருமண தடை நீக்க, பிள்ளை பேறு கிட்ட இங்கு அனுதினமும் பக்தர்கள் வேண்டி செல்கின்றனர்.