Kollemcode Bhadhrakali Temple: குழந்தை வரம் தரும் பத்திரகாளி!
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு கடற்கரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில். இங்கு தாய் கோயில் ஒரு பகுதியில் திருவிழா நடைபெறும் கோயில் மற்றொரு பகுதி என இரு கோயில்கள் அமைந்துள்ளன.
தாய் கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தாய் கோயிலில் போதிய இடவசதி இல்லாததால் அருகில் மற்றொரு இடத்தில் இக்கோயிலை அமைத்து திருவிழாவினை நடத்தி வருகின்றனர். இங்கு மூலவராக பத்ரகாளி அம்மனும் உப தெய்வங்களாக சிவனும், கணபதியும் காட்சி அளிக்கின்றனர்.
காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களிலும் பூஜைகள் நடைபெறுகிறது. இக்கோயிலில் பிரசாதமாக இளநீர், பழம், பொறி ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காளியூட்டு திருவிழா மற்றும் வருடம் தோறும் பங்குனி மாதம் மீன நட்சத்திரத்தில் நடைபெறும் பத்து நாட்கள் தூக்க திருவிழாவில் கடைசி நாளான அன்று குழந்தைகளுக்கான நடைபெறும் தூக்க நேர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
திருமணம் முடிந்து குழந்தை பேரு கிடைக்கப்படாத தம்பதியினர் குழந்தை பேறு வேண்டி கொள்ளகோடு பத்திரகாளியம்மன் வரை வேண்டிக் கொள்வது வழக்கம். அந்த வேண்டுதலின் பலனாக குழந்தை பேறு பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை பங்குனி மாதம் பரணி நாளில் நடைபெறும் தூக்க திருவிழாவுக்கு அழைத்து வந்து தூக்க நேர்ச்சி செலுத்துவர் அதன்படி இரண்டு சக்கரங்கள் கொண்ட வண்டியில் இரண்டு தூக்க மரம் வைக்கப்பட்டு அதில் நான்கு வில்கள் கட்டப்பட்டிருக்கும்.
தூக்கக்காரர்கள் துணியால் இந்த வில்லில் கட்டப்படுவர் பின்னர் அவர்கள் நேர்ச்சை குழந்தைகளை கையில் தாங்கியதும் தூக்கம் வரும் மேலே உயரும். இந்த வண்டியை பக்தர்கள் கிழித்து கோவிலில் வலம் வருபவர். அதேபோன்று காந்தி தேவியோ அசுரனை அழிக்க நடந்த போரில் காளி தேவி வெற்றி பெற்றதை நினைவு கொள்ளும் வகையில் நடக்கும் பரனேற்று திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த திருவிழாவும் 12 நாட்களுக்கு கொண்டாடப்படுகின்றது. இவ்விழாவில் இறுதி நாளில் நடைபெறும் லட்ச தீப நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகின்றது. தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை புரிகின்றனர்.