Vettudaiya Kaliamman: சாபம் நீங்க தவம் செய்த காளி!
தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்த சண்டாசுரனை காளி அழித்து வெற்றி கண்டார்.
சிவகங்கை அருகே கொல்லங்குடி கிராமத்திற்கு தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அரியாங்குறிச்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வெட்டுடைய காளியம்மன் திருக்கோயில்.
இந்த கோயிலானது தீமைகளை அழிக்கவும், தீயவர்களை திருத்தவும் வழிபாடு செய்யும் கோயிலாக இருந்து வருகிறது கண் கொடுக்கும் சிவபெருமானின் விளையாட்டாக பராசக்தி மூடியதால் ஈரேழு உலகங்களும் இருண்டன. இந்த குற்றத்திற்கு நில உலகில் கருப்பு தேவியாக தோன்றினாள் உமாதேவி.
சண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்த நிலையில் தேவர்கள் காளியை வேண்டினர். காளி சண்டாசுரனை அழித்து வெற்றி கண்டார். இதனை அடுத்து சொர்ண காளீஸ்வரரை வணங்கி தன்னுடைய சாபமான கரிய நிறம் நீங்க பெற்றார்.
தன் மீதான சாபம் நீங்க தவம் செய்த இடமே அரியாங்குறிச்சி என்றும் அந்த காளியே வெட்டுடைய காளி என்றும் கூறப்படுகிறது. வெட்டுடைய காளியின் சன்னதிக்கு நேர் எதிரே அமைந்திருக்கிறது வெட்டுடைய அய்யனார் சன்னதி.
இந்தக் கோயிலில் பைரவர் முனீஸ்வரர் சூலாட்டக்காளியம்மன் பேச்சியம்மாள் என பல்வேறு விக்ரகங்களும் அமைந்து இருக்கிறது. கோயிலின் வடபகுதியில் அமைந்திருக்கிறது சோனை கருப்பண்ண சுவாமி சன்னதி. கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது தல விருட்சமான இச்சை மரம்.
வெளியே உள்ள மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த மரத்தின் கீழே வீடு கட்ட நினைப்பவர்கள் தங்களுக்கு அந்த ஆசை நிறைவேற கற்களை அடுக்கி வேண்டுதலில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர். இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
டாபிக்ஸ்