Vana Durga: எதிரிகளின் தொந்தரவு நீக்கும் வனதுர்க்கையம்மன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vana Durga: எதிரிகளின் தொந்தரவு நீக்கும் வனதுர்க்கையம்மன்!

Vana Durga: எதிரிகளின் தொந்தரவு நீக்கும் வனதுர்க்கையம்மன்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 01, 2022 09:33 PM IST

கதிராமங்கலத்தில் அமைந்துள்ள வனதுர்க்கையம்மன் கோயில் குறித்து இங்கே காண்போம்.

ஸ்ரீ வன துர்க்கையம்மன் கோவில்
ஸ்ரீ வன துர்க்கையம்மன் கோவில்

தமிழ்நாட்டில் வனதுர்க்கைக்கு என தனி சன்னதி இங்கு மட்டும்தான் அமைந்துள்ளது. பொதுவாக கோயில்களில் துர்க்கை அம்மன் வடக்கு அல்லது தெற்கு நோக்கியே காட்சி தருவாள். ஆனால் இங்குள்ள துர்கை கிழக்கு நோக்கி அமர்ந்து காட்சி அளிக்கிறாள்.

அம்மனின் வலது கை சாய்த்து அபயஹஸ்தம், வரதம் என இரண்டு முத்திரைகளை காட்டி அருள் பாலித்தது வேறு எந்த கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாகும். நுழைவாயிலின் இரு புறங்களிலும் துவார பாலகிகள் உள்ளன.

எல்லா கோயில்களிலும் உள்ள விநாயகர், முருகன் சிலைகள் இங்கு கிடையாது. அனைத்து நாட்களிலும் ராகு காலத்தில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை, ஆடி மாதங்களில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். குலதெய்வம் தெரியாதவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபடலாம்.

குடும்ப விருத்திக்காக சந்தன அபிஷேகமும், எதிரிகளின் தொந்தரவு நீங்க குங்கும காப்பு சாற்றியும், செவ்வரளி அர்ச்சனை செய்தும் அம்மனை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். மேலும் திருமண தடைகள் குடும்பப் பிரச்னைகள் நீங்குவதுடன் காரியங்கள் சித்தி அடையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் கதிராமங்கலம் வனதுர்க்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது.

Whats_app_banner