Chandra Choodeswarar: பாவங்கள் நீங்கும் சந்திர சூடேஸ்வரர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chandra Choodeswarar: பாவங்கள் நீங்கும் சந்திர சூடேஸ்வரர்!

Chandra Choodeswarar: பாவங்கள் நீங்கும் சந்திர சூடேஸ்வரர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 29, 2022 12:51 PM IST

எந்த தொழில் தொடங்கினாலும் சந்திர சூடேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து வணங்கினால் வெற்றி கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

சந்திர சூடேஸ்வரர்
சந்திர சூடேஸ்வரர்

ஓசூர் தேர்பேட்டை பகுதியை அடைந்ததும் தாகம் எடுக்கவே தனது தோழி கங்காவை அழைத்து அங்கு ஒரு குளம் உருவாக்கினார். அந்த குளம் தான் இன்றைய பச்சை குளம் என வரலாறு கூறுகின்றது. இந்த பகுதியில் தவம் புரிந்து கொண்டிருந்த முனிவர் ஒருவர் காசியை போன்று இந்த பகுதியும் பாவங்களை தீர்க்கும் புண்ணிய தலமாக அமைய வேண்டும் என ஈசனை வேண்டியதாக கூறப்படுகிறது.

முனிவரின் வேண்டுதலை இயற்ற எம்பெருமான் பச்சை குளம் அமைந்துள்ள இந்த பகுதி பத்ரகாசி என்று அழைக்கப்படும் என்றும், காசியை போன்று இங்குள்ள பச்சை குளத்தில் நீராடி குளத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பத்ரகாசி விஸ்வநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்று கூறியதாக வரலாறு கூறுகின்றது.

மேலும் பச்சை குளம் அருகாமையிலேயே வின்முகம் கொண்ட முருகன் கோயிலும் அமைந்துள்ளது. பாம்பு தலையின் கீழ் பகுதியில் எழுந்தருளியுள்ள விநாயகரும் பின்முகம் கொண்ட முருகரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் அஸ்தியை காசியில் கரைப்பதால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்கின்ற நம்பிக்கை போல ஓசூரில் உள்ள பச்சை குழப்பம் கொண்டது என்கின்றனர் அப்பகுதி மக்கள். எந்த தொழில் தொடங்கினாலும் சந்திர சூடேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து வணங்கினால் வெற்றி கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். காசிக்கு நிகராக உள்ளதால் இந்த புண்ணிய தலமும் ஏழைகளின் காசியாகவே திகழ்கின்றது.

Whats_app_banner