பாபநாசம் ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு
லிங்கத் திருமேனியில் ஒரு சில வித்தியாசங்களுடன் தரிசனம் அளிக்கும் தலங்கள் பல உள்ளன
பனி லிங்கமாக அமர்நாத்திலும், மணல் லிங்கமாக ராமேஸ்வரத்திலும் இடம் கொண்டு அருளும் சிவபிரான். தம்முடைய லிங்கத் திருமேனியில் ஒரு சில வித்தியாசங்களுடன் தரிசனம் அளிக்கும் தலங்கள் பல உள்ளன.
ஆனால் ஒரே இடத்தில் தனித்தனியாக 108 லிங்கத் திருமேனி கொண்ட சிவபிரான் காட்சி தருகின்ற தலம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயம்.
காவிரியின் கிளையான குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்த தலத்தில், ராவண வதம் முடித்த திரும்பும்போது ஸ்ரீராமர் சிவபிரானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்கிறது தலபுராணம். அதனாலேயே இங்கேயும் ராமலிங்கர் என்கிற பெயருடன் அருள்பாலிக்கிறார் சிவபிரான்.
இக்கோயிலுக்கு முன்னால் அமைந்திருக்கிறது சூரிய புஷ்கரிணி என்னும் திருக்குளம். மிகப்பெரிய திருமேனியராகக் காட்சி தரும் சூரிய பகவான். சுமார் 6 அடி உயரத்தில் திருமேனியராகக் காட்சி தருகிறார். ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்த ராமலிங்கர்.
இதற்கு அடையாளமாகத் திகழும் புடைப்பு வடிவம் ஒன்று இங்கே உள்ளது. சூர்ப்பணகையின் மூக்கறிந்த பிறகு கரதூஷனர்களை ராமன் வதம் செய்தார். அதனால் உண்டான தோஷம் நீங்கவே இங்கு வழிபட்டதாகக் கூரப்படுகிறது.
மேற்கு நோக்கி ஓடுகின்ற குடமுருட்டி ஆற்றின் மணலை எடுத்து லிங்கங்களாகப் பிடிக்க ஆரம்பித்தார் சீதாபிராட்டி, லிங்கம் எடுத்து வரக் காசி சென்ற அனுமன் வரத்தாமதம் ஆகவே இந்த லிங்கங்களை வழிபட ஆரம்பித்தனர்.
தாமதமாக வந்த அனுமன் மனக்குறை நீங்க அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை வழிபட்டால் தான் பிரார்த்தனை பூர்த்தியாகும் என்று வரமளித்தார் ராமர். அதனால் அனுமன் கொண்டு வந்த லிங்கம் அனுமத் லிங்கம் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சி அளிக்கிறது.
பலம், வீரம், ஆற்றல், அடக்கம் என்று எந்த வகையிலும் திறன் கொண்ட அனுமன் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். இந்த ஆலயத்தின் நாயகியாக விளங்குகிறார் ஸ்ரீ பர்வத வர்தினி.
பின்னர் நீண்ட வரிசையில் அமைந்திருக்கும் 107 லிங்க மூர்த்திகள் இங்கே உள்ளன. ஆச்சரியமான அமைப்பு இது, அநேகமாக வேறு எங்குமே இப்படி இருக்கவே முடியாது. ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட வரிசையில் அமைந்திருக்கின்றன லிங்கத் திருமேனிகள்.
ஒரே லிங்கத் திருமேனியில் 108, 1008 என்ற லிங்கத் திருமேனிகளைக் கண்டு பழகிய நமக்கு, 107 லிங்கத் திருமேனிகளை ஒரே இடத்தில், ஒரே சமயத்தில் காண்பதென்பது தனிச்சிறப்புதான்.
இந்த 107 லிங்கத் திருமேனிகளை வழிபட்டால் மட்டும் போதாது மூலவர் ஸ்ரீ ராமலிங்க வழிபட்டால் மட்டும் போதாது. இன்னொருவரும் இருக்கிறார் அவர்தான் அனுமத் லிங்கம். காசியிலிருந்து அனுமனால் கொண்டுவரப்பட்ட மூர்த்தி இவர்.
குடும்ப தோஷம், தொழிலில் தேக்கம், சுபகாரியத் தடைகள் உள்ளிட்ட கவலைகள் எதுவானாலும் அவற்றுக்கான பரிகாரமாக ஒரே வழிமுறை தான் இங்கு அனுசரிக்கப்படுகிறது. அதாவது இந்த ஆலயத்தை முழுமையாக 108 முறை வலம் வந்து வழிபடுவது தான்.
தஞ்சாவூர் அருகே பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயத்தில் ராமலிங்கமாகத் தரிசனம் அளிக்கும் சிவனை வழிப்பட்டால் அனைத்து குறைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.