தமிழ் செய்திகள்  /  Astrology  /  History Manamadurai Shri Anandavalli Amman Temple

Anandavalli amman: வெள்ளை சுயம்பு லிங்கமாக காட்சிதரும் ஈசன்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 08, 2022 05:43 PM IST

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் கோயில்
ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் கோயில்

ஐந்து நிலைக்கொண்ட ராஜகோபுரத்தின் முதல் பிரகாரத்தில் மூலவராக ஆனந்தவல்லி தாயார் சன்னதியும், நுழைவாயிலின் முன்னே கொடி மரமும், அஸ்திர சக்தியும் நந்திகேஸ்வரரும் காணப்படுகின்றனர். நுழைவாயிலுக்கு முன்னதாக இடது புறம் மூன்று விநாயகரும், கிழக்கு நோக்கியும் ஆனந்தவல்லி அம்மன் சன்னதியின் கன்னி மூலையில் விநாயகரும் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி நாகசுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர்.

தாயாரின் பிரகாரத்தின் மூன்று திசைகளிலும் அம்பாள் இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தியாக அருள்பாலிக்கின்றார். தாயாரின் சன்னதிக்கு தெற்கு நோக்கி பள்ளியறை அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தின் முன்னே கம்பீரமாக ராஜகோபுரம் காணப்படுகின்றது.

வெளியே சோமநாதர் சன்னதிக்கு முன்னதாக கொடிமரமும் அதனைத் தொடர்ந்து பலிபிடமும் முன்னதாக ஆத்திர தேவார், நந்திகேஸ்வரரும் காட்சி தருகின்றனர். தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இரண்டாம் பிரகாரத்தின் வழியே கன்னி மூலையில் அனுக்கிய விநாயகர் சோமநாதருக்கு நேரே மேற்பக்கமாக சதாசிவ பிரம்மேந்திரர், காயத்ரி தேவி, ரிஷப சூலம் ஆகியவை காணப்படுகின்றன.

மகா யோகி சித்த புருஷரான சதாசிவ பிரம்மேந்திரர் இந்த திருத்தலத்தில் ஜோதி ரூபமாக காட்சி தந்து சமாதி அடைந்துள்ளார். சோமநாதர் சன்னதிக்கு வெளியே வடமேற்கு மூலையில் வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர் அருள்பாலிக்கின்றார். நவகிரகங்களும், காலபைரவர் தெற்கு நோக்கியும் ராஜகோபுரத்தின் வலப்பக்கம் சோமநாதரை பூஜித்த சந்திர பகவானும் தம் இரு மனைவியரான கார்த்திகை, ரோகிணியுடன் இங்கு தனி சன்னதியில் காட்சி அளிக்கின்றார்.

இக்கோயிலில் மட்டும் தான் வெள்ளை சுயம்பு லிங்கம் காணப்படுகின்றது. இரண்டாம் பிரகாரத்தில் சோமநாதருக்கு இடது புறமாக விநாயகர் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சன்னதியும் மூன்று சிவலிங்கமும், விஸ்வநாதர், விசாலாட்சியும் காட்சி தருகின்றனர்.

தட்சனிடம் சாபம் பெற்று சந்திரனோ தொழு நோயாளியாக மாறிய போது அகத்திய முனிவரிடம் சாப விமோசனம் கேட்க, வில்வனத்தில் காட்சி தரும் சுயம்பு லிங்கத்திற்கு தனியே கோயில் எழுப்பி வழிபட்டால் சாபம் நீங்க பெற்று நோய் நீங்கும் எனக் கூறினார். இதனையடுத்து வில்வம் மரம் நிறைந்த பகுதிக்கு சென்று அங்கு அங்கு சுயம்புவாக காட்சி அளித்த ஈசனுக்கு பூஜைகள் செய்து சாப விமோசனம் பெற்றதாகவும், சந்திரனின் வேண்டுகோளை ஏற்று அவரை இந்த திருத்தலத்தில் இன்றும் வில்வ மரங்கள் சோழ மத்தியில் உமையவளுடன் ஆனந்தவல்லி அம்மனுடன் சோமநாதராக காட்சி தருகின்றார்.

ஆடி தபசு தினத்தில் சுவாமிக்கு அணிந்த மாலையை அணிந்து கொண்டால் திருமண தடை நீங்கும் என்றும், குழந்தையில்லா தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கட்டும் என்று நம்பப்படுகின்றது. சித்திரை திருவிழா பத்து நாட்களும், ஆடி மாதம் 10 நாட்களும் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

WhatsApp channel