Pachaiamman Temple: சிறப்பாக நடைபெறும் கோமாதா பூஜை!
ஏலகிரி, மலை ஸ்ரீ பச்சையம்மன் கோயில் குறித்து இங்கே காண்போம்!
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஜோலார்பேட்டை வக்கணப்பட்டியை அடுத்த ஏலகிரி மலை அடிவாரத்தில் கிராமிய தெய்வ வழிபாட்டின் கோயில் கொண்டு விளங்கும் தேவி பச்சையம்மன் ஆதி சிவனின் அருள் சக்தியாக விளங்கும் பார்வதி தேவி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மேடையமைத்து தேவி ஸ்ரீ பச்சை அம்மனை வணங்கி வந்தனர். பின்னர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கும் சிறிய கோயில் அமைத்து வணங்கி வந்துள்ளனர். மூன்று கோயில்களையும் புதியதாக கட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கொண்டு பச்சையம்மன் ஆலயம் அமையப்பெற்றது.
கோபுரத்துடன் சிறிய நுழைவாயிலுடன் ஸ்ரீ பச்சையம்மன் மூன்று நிலை விமானத்துடன் கூடிய அழகிய கோபுரம் கருவறையில் தேவி ஸ்ரீ பச்சையம்மன், ஸ்ரீ மன்னார் சாமி சிவன், ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ காத்தாயி வழி போன்ற தெய்வங்கள் அமையப்பெற்றுள்ளது.
ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர், தமிழ் கடவுள் ஸ்ரீ முருகப்பெருமான் ஆகியோரும் அமைய பெற்றுள்ளனர். ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ நவக்கிரக மூர்த்திகள், ஏழு முனிஸ்வரர், ஸ்ரீ சப்தமாதர்களும் அருள்பாலிக்கின்றனர்.
இவ்வாலயத்தில் தனி சிறப்பாக கோமாதா பூஜையும் நடைபெற்று வருகிறது. பச்சையம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் பச்சை நிற ஆடை உடுத்தி ,ஆலயத்தில் வணங்கி செல்கின்றனர். இவ்வாலயத்தில் பச்சை நிறத்தில் விபூதியும், பச்சை நிற ஆடைகளும் ஆலயத்திற்கு வழங்கப்பட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் நடைபெறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.