சோம்பலைப் போக்கும் ஜேஷ்டாதேவி!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சோம்பலைப் போக்கும் ஜேஷ்டாதேவி!

சோம்பலைப் போக்கும் ஜேஷ்டாதேவி!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 13, 2022 10:23 PM IST

சோம்பல் மற்றும் தன்னால் இயலாது போன்ற எண்ணத்தைப் போக்கும் ஜேஷ்டாதேவி குறித்து இங்கே காண்போம்.

<p>உஜ்ஜீவநாதர் கோயில்</p>
<p>உஜ்ஜீவநாதர் கோயில்</p>

காகத்தைக் கொடியாகவும், கழுதையை வாகனமாகவும், துடைப்பத்தை ஆயுதமாகவும் கொண்டவள் என்பார்கள். பழங்காலத்தில் போருக்குச் செல்லும் இவரை வழிபட்டுச் செல்வார்கள் என்கின்றன வரலாற்றுக்குறிப்புகள்.

தம்மை வழிபடுவோருக்கு ஊக்கத்தைக் கொடுப்பவர். தம் அடியார்களை எதிர்ப்புக்குச் சோம்பல், தளர்ச்சி ஆகியவற்றை அளித்து அவர்களைத் தோல்வியுறச் செய்பவர் இந்த ஜேஷ்டாதேவி.

நாளைக்குச் செய்யலாம், அப்புறம் பார்க்கலாம் என்று எந்த ஒரு செயலையும் ஒத்துழைப்போடும் இயல்புடையவர்கள் கண்டிப்பாக வழிபட வேண்டிய தேவி என்ன ஜேஷ்டா தேவிதான்.

சோம்பல், மறதி, தளர்ச்சி போன்ற தாமச தன்மைகளை நீக்கும் அன்னை இவர். இது உய்யக்கொண்டான் திருமலை என என்று குறிப்பிடப்படும் தலம். திருக்கற்குடி என்பது தேவாரப் பெயர்.

நாவுக்கரசர் ஞான சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்றது இந்த தலம். முழுக்க முழுக்க கல் திருப்பணியாகும். இக்கோயில் அபூர்வமான சுவாமி பாதம் உள்ளது. அனேகமாக வேறு எந்த சிவாலயத்திலும் இப்படி ஒரு அமைப்பைக் கண்டிருக்க முடியாது.

முதல் பராந்தக சோழன் காலத்திலிருந்து மதுராந்தக உத்தம சோழன், ராஜராஜன், ராஜேந்திரன் என்ற பல்வேறு மன்னர்கள் செய்த திருப்பணிகளை வரிசைப் படுத்துகின்றன இங்குக் காணும் கல்வெட்டுகள்.

அஞ்சனாட்சி என்ற பெயருடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அம்பிகை. சுயம்புமூர்த்தியாக லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார் பெருமான்.

சுறுசுறுப்பு, செயலாற்றல், சாதுரியம், தன்முனைப்பு ஆகிய தன்மைகளைப் பெற ரோகிணி, மகம், அனுஷம் மற்றும் திருவோண நட்சத்திர தினங்களில் ஜேஷ்டா தேவியை வழிபடுவது சிறப்பானது.

அதேபோன்று நவமி, திரயோதசி மற்றும் பௌர்ணமி தினங்களில் ஜேஷ்டா தேவியை வழிபட உகந்த நாட்களாகும். தேவையற்ற கடந்து போன நிகழ்வுகளை நினைத்து வருந்துபவர்கள், விவாகரத்தானவர்கள், மறுமணம் செய்து கொண்டவர்கள், தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றால் துன்புறுகிறவர்கள் இந்த ஜேஷ்டா தேவியை வழிபட்டால் நல்ல பலனைப் பெறுவார்கள்.

தேவையற்ற எண்ணங்களை விலக்கி மனதில் அமைதியும் புத்துணர்வும் ஏற்படச் செய்யும் ஜேஷ்டா தேவிக்கு, செவ்வரளி மற்றும் மரிக்கொழுந்து இவற்றைக் கட்டி மாலையாகச் சமர்ப்பித்த வழிபடுவது சிறப்பானது.

கவலைக்கு மருந்து இல்லை என்று வழக்கில் சொல்வார்கள் ஆனால் எல்லா கவலைக்கு மருந்தாக உய்யக்கொண்டான் திருமலையில் அருள்பாலிக்கிறாள் ஜேஷ்டாதேவி.

Whats_app_banner