Jalakandeswarar temple: புதைந்து கிடந்த ஜலகண்டேஸ்வரர்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jalakandeswarar Temple: புதைந்து கிடந்த ஜலகண்டேஸ்வரர்!

Jalakandeswarar temple: புதைந்து கிடந்த ஜலகண்டேஸ்வரர்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 08, 2022 05:57 PM IST

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி அம்பாள் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

திருவள்ளூர் ஜலகண்டேஸ்வரர்
திருவள்ளூர் ஜலகண்டேஸ்வரர்

முன்னொரு காலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்று நீர் பெருக்கெடுத்த நேரத்தில் கரையோரத்தில் சுயம்புலிங்கமாக சிவபெருமான் இருப்பதை அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் கண்டு ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவ்விடம் தோண்டி பார்த்தபோது சிவபெருமான் லிங்க மேனியாக தென்பட்டார். அவரை ஜலகண்டேஸ்வரர் என்ற திருநாமத்தில் ஆற்றின் கரையோரம் ஆலயம் எழுப்பி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். மூலவராகவும், உற்சவராகவும் ஜலகண்டேஸ்வரரை காட்சி தருகின்றார். அகிலாண்டேஸ்வரி அருள்பாலித்து வருகின்றார்.

இக்கோயிலில் நந்திகேஸ்வரர், நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியனார், சந்திரனார், விநாயகர், முருகப்பெருமான், கிருஷ்ணமூர்த்தி நாயனார், கிருஷ்ணமூர்த்தி பெருமாள், பிரம்மா, துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் சுற்றுப்பயாரங்களில் அமைந்துள்ளன. இக்கோயிலில் நவராத்திரி, பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நாட்கள் விசேஷ தினங்களாக கொண்டாடப்படுகின்றது.

Whats_app_banner